sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : பிப் 12, 2026 07:50 AM

Google News

ADDED : பிப் 12, 2026 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 எம்.முருகன், நாகர்கோவில், கன்னியாகுமரி: ஆன்மிகம் வளர...?

தினமும் திருநீறு, திருமண் அணிந்து கோயிலுக்கு செல்லுங்கள். ஹிந்து மதத்திற்கு நெருக்கடி வரும் போது ஒற்றுமையாக இருங்கள்.

செ.சேஷாத்திரி, பெங்களூரு: இப்போது சினிமாவில் ஆன்மிகம் இல்லையே...?

திட்டமிட்டே ஆன்மிகத்தை அழிக்கிறார்கள். இதற்கு பெயர் 'மதச்சார்பின்மை'. இதனால் குற்றமும் அதிகரிக்கிறது.



ஆர்.மணிவாசகம், திருப்பரங்குன்றம், மதுரை: நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க...?

காலை வழிபாடு முடிந்ததும் ஏற்கனவே திட்டமிட்ட பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுங்கள்.

மு.ராதிகா, சுரண்டை, தென்காசி: அன்னதானம் அவசியமா...?

அவசியம். பசித்தவருக்கு உணவளித்தால் பாவம் குறையும்.

எம்.மாளவிகா, வாஸ்காஸ், டில்லி: குழந்தைகள் சாப்பிட்ட மீதி உணவை காகத்திற்கு வைக்கலாமா?

வைக்கலாம். ஓர் உயிர் சாப்பிடுவது நல்லது தானே...

ஆர்.மணி, திருத்தணி, திருவள்ளுர்: *திருவிழாவில் தேர் இழுத்தால்...?

ஊரில் அமைதியும், வீட்டில் சந்தோஷமும் இருக்கும்.



வி.ஸ்ரீநிவாசன், சிட்டலபாக்கம், சென்னை: *பழைய விநாயகர் சிலை உடைந்து விட்டது. வழிபடலாமா?

உடைந்த இடத்தை சரி செய்து வழிபடலாம்.



எஸ்.கண்ணன், நெய்வேலி, கடலுார்: சனிக்கிழமை அன்று முருகன் கோயிலில் மொட்டை போடலாமா?

கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டாமே.



ரா.அம்பிகா, வேடசந்துார், திண்டுக்கல்: சன்னதியில் திரை இட்டிருந்தால் வழிபாடு செய்யலாமா?

வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.






      Dinamalar
      Follow us