/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
தெற்கு கலிபோர்னியாவில் நவராத்திரி
/
தெற்கு கலிபோர்னியாவில் நவராத்திரி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெற்கு கலிபோர்னியாவில் நவராத்திரயை ஒட்டி தாண்டியா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாண்டியா கலைஞர்களின் பல நிகழ்ச்சிகள் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குஜராத் மற்றும் மும்பையைச் சேர்ந்த முன்னணி நாட்டுப்புற இசைக் குழுக்கள் இதில் பங்கேற்றன.
நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளையும் வழிபடுகின்றனர்.
இந்த விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
Advertisement