
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதாரம், குடிவரவு, வேலைவாய்ப்பு போன்ற பல சவால்கள் இருந்தபோதிலும், நடவு தனது பணிகளைத் தடையின்றி, உறுதியாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நடவின் முதல் இரண்டு செய்தி மலர்கள் May-2025 & Dec-2025 இங்கு இணைக்கப்பட்டுள்ளp.
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைத்துச் செயல்படச் செய்வதும், புதிய எழுத்தாளர்களை உருவாக்கி படைப்புலகிற்கு அறிமுகப்படுத்துவதுமே 'நடவு' (NATAWO - North America Tamizh Writers Organization) அமைப்பின் முக்கிய நோக்கமாகும். 2025 ஆம் ஆண்டு சனவரியில் தன் பயணத்தைத் தொடங்கிய நடவு, முறையாகப் பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கமற்ற, மதச்சார்பற்ற அமைப்பாகும்.
நடவின் எழுத்தாளர்கள், உலகத் தூதர்கள், அமைப்பாளர்கள் ஆகிய நீங்கள் - உங்கள் நூல்கள், கட்டுரைகள், படைப்புகளை இந்தச் செய்திமலரில் பகிர விரும்பினால், தயவுசெய்து contact@natawo.org என்ற மின்னஞ்சல் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், நடவின் வளர்ச்சியையும், எழுத்தாளர்களுக்கிடையேயான உறவையும் வலுப்படுத்தும் வகையில், ஒரு NATAWO WhatsApp Community நடவு சமூகக் குழுமத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பையும் வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நடவு - எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரே மேடையாகச் செயல்படுவதே எங்கள் நோக்கம்.உங்கள் மேலான முயற்சிகளையும், தொடர்ந்த ஆதரவையும் ஆவலுடன் வரவேற்கிறோம்.
- அமெரிக்காவிலிருந்து நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement

