/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
/
அபுதாபியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
செப் 19, 2025

துபாய்: ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வருகை புரிந்தார். அவருக்கு இந்திய தூதர் சஞ்சய் சுதிர் தலைமையில் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அமீரக மந்திரிகள், அதிகாரிகள் உள்ளிட்ட வர்த்தக பிரமுகர்களை சந்திப்பு இரு தரப்பு வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பாப்ஸ் ஹிந்து கோயிலில் கோயல்
அபுதாபியில் உள்ள பாப்ஸ் ஹிந்து கோயிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிப்பட்டார்.
அதனையடுத்து கோயிலின் பல்வேறு பகுதிகளை அவர் பார்வையிட்டார். இந்திய- அமீரக கலாச்சாரத்துக்கு இந்த கோவில் உதாரணமாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
---- அபுதாபியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் காஹிலா.
Advertisement