/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் தவித்த இரு தமிழர்கள் தாயகம் திரும்பினர்
/
துபாயில் தவித்த இரு தமிழர்கள் தாயகம் திரும்பினர்
செப் 13, 2025

துபாய்: துபாயில் கடந்த ஆறு மாதங்களாக வேலைவாய்ப்பும், உணவு வசதியும் இன்றி துன்புற்று வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு தமிழர்கள், கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) முயற்சியால் தாயகம் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரமேஷ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர், வாழ்வாதாரமின்றி தங்குமிடமும் இல்லாமல் சிரமப்பட்ட நிலையில், சமீபத்தில் KCC-யை தொடர்பு கொண்டனர். உடனடியாக KCC நிர்வாகிகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, சொந்த ஊருக்கு திரும்பி செல்வதற்கான அவுட் பாஸ் மற்றும் டிக்கெட் செலவுகளை ஏற்பாடு செய்தனர்.
இந்த முயற்சிக்காக திர்ஹாம் 800 அவுட் பாஸ் கட்டணம், திர்ஹஅம் 200 உணவு செலவு, திர்ஹாம் 300 டிக்கெட் மற்றும் திர்ஹாம் 400 குடும்பத் தேவைகள் ஆகிய செலவுகள் பகிர்ந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும், தமிழக பிரமுகர் வலசை பைசல் ஒருவருக்கான விமான டிக்கெட்டை வழங்க முன்வந்தார்.
இந்த சேவையில் பங்கு கொண்ட KCC நிர்வாகிகள் ஹசன் பாஷித், அப்துர் ரஹ்மான், ஜைனுலாபுதீன், எஸ்.கே.வி. ஷேக், ஹசன் பாய்ஸ், ஜியாரத், ராசிக், சாதிக் ஆகியோரும் மேலும் சிலர் இணைந்து பங்களிப்பு செய்தனர்.
இறுதியாக, அபுதாபி விமான நிலையத்தில் KCC நிர்வாகிகள் நேரடியாக சென்று, தேவையான பொருட்களுடன் வழியனுப்பினர். தற்போது இருவரில் ஒருவர் தாயகம் சென்றுள்ளார்; மற்றொருவர் விரைவில் திரும்பவுள்ளார்.
KCC சார்பிலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் சார்பிலும், உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement