sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஜெத்தா நவோதயாவின் ஓணம் கொண்டாட்டம்

/

ஜெத்தா நவோதயாவின் ஓணம் கொண்டாட்டம்

ஜெத்தா நவோதயாவின் ஓணம் கொண்டாட்டம்

ஜெத்தா நவோதயாவின் ஓணம் கொண்டாட்டம்


செப் 16, 2025

Google News

செப் 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெத்தா; சவுதிஅரேபியாவில் ஜெத்தா நவோதயா ஜூபிலி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நவோதயா காலித் பின் வலீத் பிராந்தியக் குழு “Navodaya Utsav 2025” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தி வைத்தது. அல் லயாலி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு உண்மையான திருவிழா உணர்வை வெளிப்படுத்தியது. நவோதயா பொது செயலாளர் ஸ்ரீகுமார் மாவேலிக்கரா இதனைத் திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி மற்றும் திருவிழா உற்சாகத்துடன் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான வரவேற்புரை நிகழ்ச்சி குழு Convener முனீர் பண்டிக்காடு வழங்கினார். தொடர்ந்து கிரிவர் செம்மானம் உரையாற்றினார். வரவேற்புக் குழு தலைவர் அனஸ் பாபா, பிரதம முக்கியஸ்தர் ஷிபு திருவனந்தபுரம், பொன்முத்தல் தலைவர் கிஸ்மத் மேம்பாட் , பொருளாளர் சி.எம். அப்துல் ரஹ்மான், மத்திய மகளிர் குழு Convener அனுபமா பிஜுராஜ், பிராந்திய பொருளாளர் தேவக் செம்மலம், மகளிர் குழு Convener நீனு விவேக் மற்றும் சாகர் மலப்புரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மத்தியக்குழு உறுப்பினர் யூசுப் மேலத்து நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை

நிகழ்ச்சி குழு Convener ஜிஜோ அங்கமாலி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க புகழ்பெற்ற நேரடி கஜல் பாடகர் ராஸி தனது ஆழமான குரலில், உணர்ச்சியுடன் பாடிய இசை நிகழ்ச்சி மழைத்துளி போல் சுகமான சூழலை உருவாக்கி, அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தது. அதனுடன், ஆறு குழுக்கள் உற்சாகமாகப் பங்கேற்ற சமையல் போட்டி திருவிழா உணர்வை மேலும் தீவிரப்படுத்தியது. லிஸ்ஸி தலைமையிலான Green Team முதல் பரிசையும், சிமி தலைமையிலான Orange Team இரண்டாம் பரிசையும் வென்றது. Purple Team மூன்றாம் இடத்தைப் பெற்று நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டியது.

நவோதயா 2025 இன் ஒரு பகுதியாக, கலா ரத்னா நடனப் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் ஆற்றல்மிக்க டஃப் முட்டு, தேவதாசி மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களை மெய்மறக்க வைத்தனர். இவற்றை ஸ்ரீதா அனில் குமார் வழிநடத்தினார். அவரது கலை பார்வையுடன் கூடிய நடன அமைப்புகள் பார்வையாளர்களை மயக்கின.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருவிழா

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பெரும் கரவொலிகளும் பாராட்டுக்களும் பொங்கிய நிலையில், கலை மற்றும் கலாச்சாரத்தில் நிரம்பிய அந்த மாலை மறக்க முடியாத கொண்டாட்டமாக மாறியது. தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட மூன்று நிகழ்ச்சிகள் பிழையின்றி இணைத்த நவோதயா 2025 ஓணம் விழா, ஜெத்தாவில் வசிக்கும் இந்தியர்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய ஒரு வண்ணமயமான திருவிழாவாக மலர்ந்தது.


--- சவுதி அரேபியாவில் இருந்து நமது தினமலர் நிருபர் M Siraj


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us