/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
மியூனிச்சில் அகதவ சிறப்பு பயிற்சி
/
மியூனிச்சில் அகதவ சிறப்பு பயிற்சி

செய்க தவம் ...செய்க தவம் .நெஞ்சே தவம் செய்தால் எய்த விரும்பியதையெல்லாம் பெறலாம் என்கிறார் மகா கவி பாரதியார். ஆம் மனிதனை மாமனிதனாக்கி தெய்வநிலைக்கு உயர்த்துகின்ற அகதவ சிறப்புபு் பயிற்சி மியூனிச்சில் செப்டம்பர் 13 - 14 - 15 தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவுக்கு வெளியே இத்தகு நிகழ்வு நடைபெறுவதே சிறப்பு . அதுவும் சற்குருவே நேரடியாகப் பயிற்சி அளிக்கிறாரெனில் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்ததன்றோ ?
தென்கயிலை - திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர்ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் தமது பல்வேறு ஆன்மிக அலுவல்களிடையே உடல்நலம், மனவளம், ஆன்ம பலம் பெற உலகிடை சாந்தியும் சமாதானமும் சந்தோசமும் நிறைந்த சந்திய யுகம் படைக்கும் சன்மார்க்க நெறி நின்று இத்தகு பயிற்சியையும் அளித்து வருவது இப்பயிற்சியில் பங்கேற்றோர் மூதாதையர் செய்த தவப் பயனன்றோ ?
மியூனிச் அமைப்பு தேர்ந்தெடுத்த மிகச் சிலரே இப்பயிற்சி பெற்றனர். மூன்று நாட்களும் காலை ஒரு நிமிட அமைதியோடு, குரு கீதம், ஞான கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு தொடங்கியது. குருமகான் ஒவ்வொருவரையும் கூர்ந்து நோக்கி இப்பயிற்சியை அளித்தார்கள். பயிற்சி பெற்றோர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஜெர்மனி ஞானாசிரியர்கள் உடனிருந்து பயிற்சி சிறக்க உதவினர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement