தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ 'நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற குறிக்கோள் சிறந்தது'

'நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற குறிக்கோள் சிறந்தது'

'நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற குறிக்கோள் சிறந்தது'


UPDATED : ஜூன் 21, 2026 11:26 AM

ADDED : ஜூன் 20, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2026 11:26 AM ADDED : ஜூன் 20, 2026 03:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுஸ்ரீதரன் எழுதிய 'AI to Zero எழுத்தும் சிந்தனையும்' என்ற நுால் குறித்து சிறுவாணி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவர் எழுதிய AI to Zero, எழுத்தும் சிந்தனையும் என்ற நுால், தமிழ் இலக்கியம், பாடல்கள், ஆன்மிகம், வானியல் போன்ற பல தகவல்களோடு சுவாரசியமான கலைக் களஞ்சியமாக உள்ளது.

இன்றைக்கு இந்த நொடியை அனுபவிப்போம், நாளை என்பது வெறும் கனவு, அதை நாம் ஏன் நம்ப வேண்டும் என்கிறார்.

கருந்துளை பற்றிய ஒரு கட்டுரையில், மரணமும் ஒரு கருந்துளை போன்றதே. உள்ளே நுழைந்தவர்கள் மீண்டும் திரும்புவதில்லை எனச் சொல்லும்போது, ஞான மார்க்கத்தில் 'ரிட்டர்ன் டிக்கெட்' கிடையாது எனும் ஓஷோவின் கருத்தை சொல்கிறார்.

இளவயதில் நிறைய நேரம் கிடைக்கிறது, உடலில் வலிமை இருக்கிறது. ஆனால் பணம் இல்லை. நடுத்தர வயதில் நேரம் இல்லை, முதுமையில் வலிமை இல்லை. ஆக ஏதாவது ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கிறது என்கிறார்.

நான் பைலட் ஆவேன், பணக்காரன் ஆவேன், நாட்டை ஆள்வேன் என்று சொல்வதை விட 'நான் சந்தோஷமாக இருப்பேன்' என்ற குறிக்கோள் சிறந்தது. அதை எளிதில் அடைய முடியும். இந்த நிமிடம் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற எளிய குறிக்கோளை நாம் வைத்துக்கொள்வது நல்லது என்கிறார் நுாலாசிரியர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us