sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

டூவீலரில் உலகம் சுற்றும் சிங்காரவடிவேல்

/

டூவீலரில் உலகம் சுற்றும் சிங்காரவடிவேல்

டூவீலரில் உலகம் சுற்றும் சிங்காரவடிவேல்

டூவீலரில் உலகம் சுற்றும் சிங்காரவடிவேல்

1


ADDED : நவ 17, 2024 11:40 AM

Google News

ADDED : நவ 17, 2024 11:40 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக நாடுகளில் மக்களின் கலாசாரம், பண்பாட்டை அறிய இருசக்கர வாகனத்தில் உலகை சுற்றி வருகிறார் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்ற கணினி மென்பொருள் துறை தொழில் நுட்ப பொறியாளர் சிங்காரவடிவேல்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாண்டுகுடியில் பிறந்த இவர் தனது பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பாண்டுகுடி அரசுப்பள்ளியில் ஆரம்ப கல்வியை பயின்றவன் நான். பி.இ., முடித்து சிங்கப்பூர், இந்தோனேஷியாவில் பணி செய்துவிட்டு அமெரிக்கா, கனடா சென்று ஆராய்ச்சி படிப்பை முடித்து மைக்ரோ சாப்ட் உட்பட பல நிறுவனங்களில் பணிபுரிந்தேன்.

விருப்ப ஓய்வில் வந்த பின் உலகை டூவீலரில் சுற்ற ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து இந்தாண்டு மேயில் பயணத்தை துவக்கி போய் கொண்டிருக்கிறேன். பயணம் 3 முதல் 4 ஆண்டுகள் நீடிக்கும்.

இதற்கு முன் உலகப் பயணம் செய்தவர்களின் அனுபவ புத்தகங்களை படித்து மனதளவிலும், பொருளாதார அளவிலும் தயார்படுத்திக் கொண்டேன். பயணத்தில் தனிமையும், எனது வயதும் சவாலாக இருக்கும்.

எனது பயணத்திற்கு பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் அட்வென்சர் டூவலரை பயன்படுத்துகிறேன். நான் தங்குவதற்கான கூடாரம், பல்வேறு தொழில் நுட்ப சாதனங்களை டூவீலரில் வைத்துள்ளேன்.

சாமானிய மனிதனாக அனைத்து நாடுகளிலும் வாழும் மக்களின் பண்பாடு, கலாசாரம், பொருளாதார நிலை உள்ளிட்ட அனைத்தையும் அறிந்து கொள்ளவே புறப்பட்டேன். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 1100 கி.மீ., வரை 16 மணி நேரம் பயணம் செய்து வருகிறேன். எனக்கு சவாலாக இருந்தது அமேசான் நதியை கடந்தது தான்.

டெக்சாஸ் பகுதியிலிருந்து மெக்சிகோ, எல் சால்வடார், நிகரகுவா, மத்திய அமெரிக்காவின் பனாமா பகுதிக்கு சென்றேன். பனாமா கால்வாயை பார்வையிட்டேன்.

அரசியல் சூழலால் பிரெஞ்சு கயானா நாடுகளுக்கு போக்குவரத்துக்கு சாலை வசதிகள் இல்லாததால் அமேசான் நதி வழியாக ஆறு படகுகளில் மாறி, மாறி 18 நாட்களில் 4000 கி.மீ., பயணித்தேன்.

அமேசான் பகுதியில் மொழி தெரியாத நிலையில் சைகையால் மட்டுமே பேசி பழகி படகுகளில் பயணித்தேன். படகுகளில் 2 அடி அகலம், 5 அடி நீளம் உள்ள ேஹமாக் என்றழைக்கப்படும் தொட்டிலில் தான் துாங்க வேண்டும். படகில் வழங்கப்படும் உணவுகள் அவ்வளவு சிறப்பாகவும், போதுமானதாகவும் இல்லை.

மிகுந்த சிரமங்களுக்கு இடையில் அமேசான் நதியை கடந்து பிரெஞ்சு கயானா அடைந்தேன். ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆராய்ச்சி மையம் இங்கு உள்ளது. இங்கிருந்து சூரிநாம் அடைந்தேன்.

இந்த நாட்டில் ஒரு கோயிலில் அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தனர். அங்கு சென்று சாப்பாடு கேட்ட போது கோயில் உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என உணவு தர மறுத்து விட்டனர். கையில் அந்த நாட்டு பணம் இல்லாத நிலையில் பசியில் தவித்தேன். அங்கிருந்த 9 வயது சிறுவன் தனது வீட்டில் சேமிப்பாக வைத்திருந்த பணத்தை தந்தான். ஓட்டலில் சாப்பிட்டு செல்லுமாறு கூறினான். கண்ணீர் விட்டு அழுதேன். மனிதம் இன்னும் சாகவில்லை என்பதை அறிந்து கொண்டேன்.

போக்குவரத்து பெரிய அளவில் இல்லாததால் ஆப்ரிக்கா நாடுகளை சுற்ற 3 மாதங்களாகும். அங்கிருந்து மொராக்கோ வழியாக ஸ்பெயின், ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, அங்கிருந்து கப்பல் வழியாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து சென்று மீண்டும் கனடா வழியாக டெக்சாஸ் அடைய வேண்டும்.

பயணத்தில் எனக்கு கிடைக்கும் அனுபவங்களை புத்தகங்களாக வெளியிட உள்ளேன். தமிழில் 6 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். 'ஆத்தாவின் கல்லறையில் ஒரு ஆவாரஞ்செடி' என்ற புத்தகம் நாமக்கல் கவிஞர் விருது பெற்றுத் தந்தது. மன உறுதியுடன் எனது பயணத்தை தொடர்கிறேன் என்றார்.






      Dinamalar
      Follow us