/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
தன்னம்பிக்கையே தாரக மந்திரம்: சாதனை பெண் பெனிட்டா இமாகுலேட்
/
தன்னம்பிக்கையே தாரக மந்திரம்: சாதனை பெண் பெனிட்டா இமாகுலேட்
தன்னம்பிக்கையே தாரக மந்திரம்: சாதனை பெண் பெனிட்டா இமாகுலேட்
தன்னம்பிக்கையே தாரக மந்திரம்: சாதனை பெண் பெனிட்டா இமாகுலேட்
ADDED : மார் 10, 2024 11:59 AM

சிவகங்கை அருகே மங்காம்பட்டி சொந்த ஊர். கேட்டரிங் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காகவே கேட்டரிங் படிக்க விரும்பினேன். அது நடக்காமல் பி.எஸ்சி., சைக்காலஜி படிக்க துவங்கி, அந்த படிப்பை பாதியிலேயே நிறுத்தி உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட துவங்கினேன். உணவு பாதுகாப்புத்துறையில் சான்றுகளை பெற்று, சிவகங்கையில் வீட்டிலேயே சிறு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
எனது முதல் சிறுதொழிலே கருவாடு சுத்தம் செய்து விற்றது தான். இந்த துவக்கத்தில் இருந்து மாற்றம் கொண்டு வர எண்ணினேன். அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்கள் தயாரிக்க திட்டமிட்டு முதலில் தொக்கு வகைகள் தயாரித்தேன். பின்னர் இறால் இட்லி பொடி, பிரண்டை, தக்காளி, நெத்திலி தொக்கு, மா இஞ்சி ஊறுகாய் என பலவித உணவு பொருட்களை தயாரித்து மார்க்கெட்டிங் செய்தேன். உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனத்தை சேர்க்காதது எனது சக்சஸ்.
முதலில் ரூ.6 ஆயிரம் முதலீட்டில் தொழில் துவங்கி விரிவு படுத்தியுள்ளேன். புதுப்புது சிந்தனையுடன் தீராத முயற்சியுடன் ஒரு விஷயத்தை அணுகினால் நம்மால் சாதிக்க முடியும். எனது ஆசையே இத்தொழிலை அபிவிருத்தி செய்து, என்னிடம் பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்கு தேவையான கல்வி செலவுகளை நானே ஏற்க வேண்டும் என்பது தான். இந்த லட்சியத்திலும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உண்டு. 'தன்னம்பிக்கையே முதலீடு' என்பதை தாரக மந்திரமாக கொண்டு இயங்குகிறேன். என்கிறார்.

