/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
நல்ல கவிதைகளை வாசித்து கொண்டாட வேண்டும்
/
நல்ல கவிதைகளை வாசித்து கொண்டாட வேண்டும்
ADDED : மார் 15, 2026 05:24 AM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் கவிஞர் இசையின் முழு கவிதை தொகுப்பு குறித்து கவிஞர் பூபாலன்... இன்றைய நவீன படைப்பிலக்கிய சூழலில், 100க்கு அதிமான நல்ல கவிஞர்கள் உள்ளனர். அதில் இசை முக்கியமானவர். இவர் எழுதிய 10 கவிதை தொகுப்புகளில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இந்நுால்.
இசையின் கவிதை மொழி அந்தரங்கமானது. ஆழமான கருத்தோட்டத்தை கொண்டது. வாழ்வின் எல்லா தருணங்களிலும், இசையின் கவிதை ஏதோ ஒன்று நினைவுக்கு நமக்கு வரும். நாம் கவனிக்க தவறிய எளிய விஷயங்களில் இருக்கும் பேரழகை, நமக்கு காட்சிப்படுத்தக் கூடியவை இவர் கவிதைகள்.
ஒவ்வொரு கவிதையை படிக்கும் போதும், அவரது தனித்துவமான கவிமொழி, புன்னகைக்க துாண்டும் சொற்கள், நிகழ்காலத்தின் சித்திரமாக தோற்றமளிக்கிறது. எளிமையான கவிதைகள் என்றாலும், அவை வெறும் செய்தியாகவோ, சம்பவங்களாகவோ இல்லை.
நல்ல கவிதைகளையும், அதை படைத்த கவிஞனையும் அவன் வாழும் காலத்திலேயே கொண்டாட வேண்டும். அந்த வகையில் இந்த தொகுப்பில் உள்ள இசையின் கவிதைகள் அனைத்தும் வாசகர்கள் வாசித்து கொண்டாட தகுந்தவை.

