ADDED : ஜூன் 09, 2026 02:53 AM

நாமக்கல்; நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்-லுாரியில், நேற்று மூன்றாம் நாளாக நடந்த கலந்-தாய்வில், 151 மாணவியர் சேர்க்கை பெற்றனர்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 2026-27ம் கல்வியாண்டிற்-கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவியர் சேர்க்கை, கடந்த, 5ல் தொடங்கியது. கல்லுாரி துணை முதல்வர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். முதல் இரண்டு நாட்கள், விளை-யாட்டு, தேசிய மாணவர் படை, மாற்றுத்திறனா-ளிகள், முன்னாள் ராணுவத்தினர், அந்தமான் நிக்-கோபார் தமிழ் மாணவியருக்கான கலந்தாய்வு நடந்தது.மூன்றாம் நாளான நேற்று, 400 முதல், 300 மதிப்-பெண்கள் வரை பெற்றுள்ள மாணவியருக்கு நடந்தது. அதில், 151 மாணவியர் சேர்க்கை பெற்-றனர். இன்று, 299 முதல், 275 வரை மதிப்பெண் பெற்றுள்ள மாணவியருக்கும், நாளை, 274 முதல், 250 வரை மதிப்பெண் பெற்றுள்ள மாணவிய-ருக்கும், சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
