




இதன் காரணமாக ராமர் அனுப்பிய பரதன்,சத்ருக்கன் உள்ளீட்டோரை வென்று அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்புகின்றனர்.
வல்லமை பொருந்திய அனுமனையும் தோற்கடித்து அவரது கைகளைக் கட்டி தன் தாயார் சீதை முன் கொண்டுவந்த நிறுத்துகின்றனர்.
அனுமனின் அந்த நிலை கண்டு துடிதுடித்துப் போன சீதை உடனடியாக அனுமனை விடுவித்ததுடன் தான் இலங்கையில் இருந்த போது அனுமன் செய்த உதவிகளை எல்லாம் மகன்களிடம் எடுத்துரைத்தாள்.
லவனும் குசனும் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன் தாங்கள் யார் என்பதையும் அறிந்துகொண்டனர் அதன் பின் தந்தை ராமரை சந்தித்தது சபையில் அங்கம் வகித்தது எல்லாம் பின்கதை.
அனுமனை வென்ற கதையை மட்டும் அழகான கதகளி காவியமாக சென்னை திருவான்மியூர் கலாச்சேத்ராவில் நடைபெற்ற கதகளி நாட்டிய விழாவில் கடைசி நாள் நிகழ்வாக நடத்தினர்.,பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.
-எல்.முருகராஜ்

