PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM
![]() |
குதிரைப்பந்தயம் அனைவருக்கும் தெரிந்ததுதான் மைதானத்தில் வேகமாக ஒடுவது
குதிரையேற்றம் என்பது சிறிய மைதானத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய பெரிய தடைகளைத்தாண்டிக்குதிப்பதாகும்.
தடைகளை எவ்வளவு நேர்த்தியாகவும் வேகமாகவும் தாண்டுகிறது என்பதன் அடிப்படையில் குதிரைகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
![]() |
குதிரைப்பந்தயம் போலவே இதிலும் குதிரையை ஜாக்கி எனப்படும் ஆனோ,பெண்ணோ இயக்குர்.
சென்னையில் 1780 ஆம் ஆண்டு ஆளுனராக இருந்த வில்லியம் லாங்கன் என்பவர் தனது பாதுகாப்பு பணிக்காக குதிரைப்படையை துவக்கினார்.
அதன்பின் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட குதிரைப்படை தற்போது சென்னையில் காவல் மோட்டார் வாகனப்பிரிவு துணை ஆணையர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.சென்னை எழும்பூர் புதுப்பேட்டையில் உள்ள குதிரைப்படை வளாகத்தில் 24 குதிரைகள் உள்ளன.
இந்தக் குதிரைப்படையினர் அன்றாடம் கடற்கரை சென்று மாலை நேர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவர் பின் குடியரசு தின,சுதந்திர தின அணிவகுப்பில் பங்குபெறுவர்.
புதுச்சேரி உள்ளீட்ட சில மாநிலங்களில் குதிரையேற்றப் போட்டிகள் தொடர்ச்சியாக நடந்துவந்தாலும் சென்னையில் இதுவரை நடந்தது இல்லை.
![]() |
குதிரைப்படையின் திறனை வெளிப்படுத்தவும்,இளைஞர்களிடம் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னையில் முதல் முறையாக குதிரையேற்றப்போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு சென்னை சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் அமைச்சர் உதயநிதி ஐந்து லட்சம் ரூபாய் போட்டிச் செலவுகளுக்காக நிதியினை வழங்கினார்.
சென்னை போலீஸ் பிரிவில் உள்ள குதிரைகள் மற்றும் பக்கத்து மாநிலங்களில் உள்ள குதிரைகள் தனியார் வைத்துள்ள குதிரைகள் என்று 46 குதிரைகள் எட்டு பிரிவின் கீழ் கலந்து கொள்கின்றன.
போட்டிகள் இன்று துவங்கியது நாளையும் நாளை மறுநாளும் நடைபெற உள்ளது.போட்டியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசமாகும்.
-எல்.முருகராஜ்




