PUBLISHED ON : மார் 16, 2026

கச்சினா பொம்மைகள் (Kachina Dolls),
நட்கிராக்கர் பொம்மைகள் (Nutcracker Dolls),
மத்ரியோஷ்கா (Matryoshka dolls),
மனேகி-நேகோ (Maneki-neko),
ஹினா-நிங்யோ (Hina-ningyo)
பொம்மைகளின் பெயர்கள் அருகே கொட்டிக் கிடக்கின்றன. கீழேயுள்ள கேள்விகளுக்கு ஏற்ப, சரியான பதில்களை எடுத்து எழுதுங்கள்!
1. ஒரு முட்டை வடிவப் பொம்மையைத் திறந்தால் அதற்குள் அதைவிடச் சிறிய பொம்மை, அதைத் திறந்தால் இன்னும் சிறியது என ஒன்றிற்குள் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் ரஷ்ய நாட்டுப் பொம்மைகளின் பெயர் என்ன?
2. இயற்கை வண்ணங்கள் மற்றும் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, வட அமெரிக்கப் பழங்குடி மக்களால் (Hopi) உருவாக்கப்படும், ஆவிகளின் சக்தியைக் குறிப்பதாகக் கருதப்படும் பொம்மைகளின் பெயர் என்ன?
3. ஜப்பான் நாட்டின் பாரம்பரியத் திருவிழாவான 'ஹினாமட்சுரி' (Hinamatsuri) அன்று வரிசையாக அடுக்கி வைக்கப்படும், அந்த நாட்டின் அரச குடும்பத்தைப் பிரதிபலிக்கும் அழகான பொம்மைகளின் பெயர் என்ன?
4. ஜெர்மனியின் எர்ஸ்பெகிர்ஜ் (Erzgebirge) மலைப் பகுதிகளில் முதன்முதலில் உருவாக்கப்பட்டு, ராணுவ வீரர்கள், ராஜாக்கள் அல்லது காவலர்கள் போன்ற அதிகாரமிக்க மனிதர்களின் உருவத்தில் செதுக்கப்படும், வாய் பிளந்த நிலையில் இருக்கும் பொம்மைகளின் பெயர் என்ன?
5. சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் புகழ்பெற்ற, கைகளை உயர்த்தி 'வா வா' என அழைப்பது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்படும் பூனை வடிவப் பொம்மைகளின் பெயர் என்ன?
விடைகள்:
1. மத்ரியோஷ்கா (Matryoshka dolls)
2. கச்சினா பொம்மைகள் (Kachina Dolls)
3. ஹினா--நிங்யோ (Hina--ningyo)
4. நட்கிராக்கர் பொம்மைகள் (Nutcracker Dolls)
5. மனேகி-நேகோ (Maneki-neko)

