தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/அமிழ்தமிழ்து: வினை முற்றுப் புதிர்

அமிழ்தமிழ்து: வினை முற்றுப் புதிர்

அமிழ்தமிழ்து: வினை முற்றுப் புதிர்


PUBLISHED ON : நவ 25, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2024


Follow on Google
அ நிறம் | அளவு

வினைச்சொற்கள், வினைமுற்றுகளாக முடியும்போது முக்காலங்களையும் உணர்த்தும். அவற்றைத் தெரிநிலை வினைமுற்றுகள் என்பார்கள். காலம் தெரிகின்ற நிலையில் அவை இருப்பதால் தெரிநிலை வினை முற்றுகள் என்ற பெயரைப் பெற்றன.

இறந்த காலத்தில் ஒரு வினைமுற்றைச் சொன்னால், அதன் நிகழ்கால வினைமுற்றையும் எதிர்கால வினைமுற்றையும் எளிதில் கூற முடியும்.

வந்தான் என்று ஒரு வினைமுற்றினை, இறந்த காலத்தில் கூறுகிறோம் எனக் கொள்வோம். அதன் நிகழ்கால, எதிர்கால வினைமுற்று வடிவத்தை நம்மால் எளிதில் கூற இயலும்.வருகிறான், வருவான் என்பன அவை.

வந்தது என்று அஃறிணை ஒருமையில் அமைந்தால் வருகிறது, வரும் என்று அமைப்போம்.முக்காலங்களிலும் அமைந்த வினைமுற்றுத் தொடர்களை, இந்தப் புதிர்களில் அமைப்போம். அவற்றில் ஒரு காலத்தைக் குறிப்பது விடுபட்டிருக்கும். அதனைக் கூறவேண்டும்.

அ) கூறினாள், கூறுகிறாள், __________.

ஆ) எடுத்தான், __________, எடுப்பான்.

இ) __________, அசைகிறது, அசையும்.

ஈ) பிடிபட்டான், பிடிபடுகிறான், __________.

உ) வந்தாயா? ___________? வருவாயா?

ஊ) பாடிவிட்டாள், பாடிவிடுகிறாள், ___________.

எ) ___________, சொல்கின்றார், சொல்வார்.

ஏ) மேய்ந்தன, ____________, மேயும்.

ஐ) _____________, பழக்குகிறான், பழக்குவான்.

- மகுடேசுவரன்

விடைகள்:

அ) கூறுவாள்

ஆ) எடுக்கிறான் / எடுக்கின்றான்

இ)அசைந்தது

ஈ) பிடிபடுவான்

உ) வருகிறாயா?

ஊ) பாடிவிடுவாள்

எ) சொன்னார்

ஏ) மேய்கின்றன

ஐ) பழக்கினான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us