sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

ஆபரேஷன் விஜய் திவாஸ்...

/

ஆபரேஷன் விஜய் திவாஸ்...

ஆபரேஷன் விஜய் திவாஸ்...

ஆபரேஷன் விஜய் திவாஸ்...

1


PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1251967


நம் நாடு சுதந்திரமடைந்த பிறகு பாக்கிஸ்தான் பிரிந்து தனி நடானது.

பிரிந்து போன பாக்கிஸ்தான் மொழியால் கிழக்கு பாக்கிஸ்தான்(இன்றைய பங்களாதேஷ்) மேற்கு பாக்கிஸ்தானாகியது.கிழக்கு பாக்கிஸ்தானில் பெங்காலி மொழி பேசினர் மேற்கு பாக்கிஸ்தானில் உருது மொழி பேசினர்.

Image 1251968


மேற்கு பாக்கிஸ்தானில் இருந்தவர்கள் தாங்கள் பேசும் உருது மொழியையே அரசாங்க மொழியாக்கியதுடன் அதனையே கிழக்கு பாக்கிஸ்தான் மக்களும் ஏற்கவேண்டும் என்று ஆணையிட்டனர்.அது மட்டுமின்றி கிழக்கு பாக்கிஸ்தானின் வளர்ச்சியில் சிறிதும் அக்கறையும் காட்டவில்லை.

Image 1251969


இதனால் மனம் வெறுத்த கிழக்கு பாக்கிஸ்தான் மேற்கு பாக்கிஸ்தானிடம் இருந்து அரசியல் அதிகாரம் பெற அவாமி லீக் என்ற கட்சியைத் துவங்கி ேஷக் முஜிபுர் ரகுமான் தலைமையில் பேராடியது.ஒரு கட்டத்தில் பிரிவினை கேட்டு நின்றது.

Image 1251970


இதைப் பொறுக்காத மேற்கு பாக்கிஸ்தான் ராணுவத்தை ஏவி போராட்டக்காரரர்களை மிருகத்தனமாக அடக்க முற்பட்டது.

இதன் காரணமாக அப்பாவி மக்கள் அகதிகளாக மாறி பக்கத்தில் உள்ள நாடான இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர்.

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வந்த நிலையில் மேலும் பல லட்சம் பேர் அகதிகளாக வருவர் என்பதாலும் இந்தப் பிரச்னையில் தலையிடாமல் இந்தியாவால் இருக்கமுடியவில்லை.

கிழக்கு பாக்கிஸ்தான் விடுதலைக்காக போராடிய உள்நாட்டு போராட்டக்குழுவான 'முக்தி வாஹினிக்கு' இந்தியா ராணுவம் எல்லாவிதத்திலும் உதவியது.

Image 1251971


அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியும்,ராணுவ ஜெனரலாக இருந்த மானெக்சாவும் இந்தப் பிரச்னையை மிக அருமையாக ராஜதந்திரத்துடன் அணுகினர்.

நேரடியாக தலையிட்டால் பாக்.கிற்கு ஆதரவாக சீனாவும்,அமெரிக்காவும் வரும் என்பதால் நமக்கு இதில் போரில் அக்கறை இல்லை என்பது போலவே வெளி உலகிற்கு காட்டிக்கொண்டே குறுகிய கால போர் மூலம் பாக் படையை வழிக்கு கொண்டு வர ஒரு பக்கம் தீட்டப்பட்டது.

Image 1251973


இன்னோரு பக்கம் உலகம் முழுவதும் பயணம் செய்த பிரதமர் இந்திரா கிடைத்த வாய்ப்பில் எல்லாம் தஞ்சம் புகுந்துவரும் அகதிகளின் பரிதாபத்தை எடுத்துரைத்துக் கொண்டே வந்தார்.

இந்த கொடுமையை ஏன் இந்தியா பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் ஒரு முடிவு எடுக்காலாமே? என உலகநாடுகள் முணுமுணுக்குமளவிற்கு அகதிகளின் அவலத்தை எடுத்துரைத்தார்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல பிடிக்காத இந்தியாவிற்கு அகதிகளாக போகிறவர்களை மிரட்டுவதற்காக இந்தியாவில் சில இடங்களில் விமான தாக்குதலை பாக்கிஸ்தான் நடத்தியது.

இதற்கு பதிலுக்கு பதில் கொடுப்பது போல ஆரம்பித்து ஆனால் மரண அடி கொடுக்கும் வகையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தரை,கப்பல்,மற்றும் விமானப்படையின் மூலம் உக்கிரமான தாக்குதலை பாக் மீது இந்தியா நடத்தியது.

Image 1251974


என்ன நடக்கிறது என்று சீனாவும்,அமெரிக்காவும் யோசிப்பதற்குள் பாக்.படைகள் சின்னாபின்னமாக்கப்பட்டது,சிதறடிக்கப்பட்டது.

போர் ஆரம்பித்து 13 நாட்களுக்குள் பாக்.படைகள் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆயுதங்களுடன் சரணடைந்தது.டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள், ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்திய ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜெக்ஜித்சிங் அரோரா தலைமையிலான கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.இவ்வளவு வீரர்கள் இருந்தும் எதிர்த்துப் போராட திராணியின்றி இந்திய படையிடம் மண்டியிட்டு சரணடைந்தது உலக போர் வரலாற்றில் முக்கியமான பதிவாகும்.

போரில் வென்ற கையோடு கிழக்கு பாக்கிஸ்தானுக்கு விடுதலையும் பெற்றுக் கொடுத்து டாக்காவை தலைமையிடமாகக் கொண்ட பங்களாதேஷ் நாடும் உருவாக்கப்பட்டது. டிசம்பர் 16, 1971 முதல் வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான புதிய வங்கதேச அரசு உருவானது.

இந்த வெற்றியை 'விஜய் திவாஸ்' என்ற பெயரில் வெற்றி தினமாக கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நம் நாடு கொண்டாடி வருகிறது, இந்த வெற்றிக்கு நம் இந்திய வீரர்கள் பலரும் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு இந்திராபாலன் எழுத்தில் எஸ்பிஎஸ் கிரியேஷன்ஸ் ராமன் இயக்கத்தில் ஆங்கிய நாடகமாக சென்னை குருநானக் கல்லுாரியில் கடந்த 31/3/2024 ஆம் தேதி அரங்கேற்றப்பட்டது.

நாடகத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பிரமாதப்படுத்திவிட்டனர் ,நம் ராணுவத்தை நினைத்து பெருமை கொள்ளும் வகையில் நாடகம் அமைந்திருந்தது.

அகதிகள் புலம் பெயரும் நிகழ்வு,உயிர் காக்க பாக்.ஜவான்களின் கால்களை பிடித்து பேராசிரியர் புலம்புவது,கர்ப்பினி மணைவியிடம் ராணுவ வீரர் ஆசிபெற்று போருக்கு கிளம்புவது,ராணுவ வீரர்கள் உயிரை பணயம் வைத்து ஆற்றைக் கடப்பது என்று பல காட்சிகள் கண்களை கலங்க செய்துவிடுகிறது.

நம்மில் பலர் ராணுவ ஜெனரல் மானேக்சாவை நேரில் பார்த்தது இல்லை ஆனால் நிறயை கேள்விப்பட்டு இருப்போம் இந்த நாடகத்தின் மூலம் அவர் எப்படி இருந்திருப்பார் என்பதை அறியலாம் அந்த அளவிற்கு கம்பீரமான நடிப்பு அதே போல அணிக்கு தலைமை தாங்கிய கிருஷ் என்ற கிருஷ்ணசாமியின் நடிப்பும் அபாரம்.

ஒரு வேடிக்கை என்னவென்றால் பங்களாதேஷ் போரில் தலைமை தாங்கி போரிட்ட கிருஷ்ணசாமி இப்போதும் இருக்கிறார், அவர்தான் நாடகத்திற்கு சிறப்பு விருந்தினரும் கூட ,அவரும், அவராக மேடையில் நடித்த கிருஷ் என்பவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியது பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.

இந்தப் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் யாரும் இந்த அரங்கில் இருக்கிறீர்களா என்ற அறிவிப்பை தொடர்ந்து அரங்கில் ஆங்காங்கே இருந்த பெரியவர்கள் சிலர் எழுந்து மேடைக்கு வர அவர்களை கவுரவித்து விழா மேடை தன்னை கவுரவித்துக் கொண்டது.

ஓற்றுமை,தியாகம்,தேசப்பற்று இதை எல்லாம் பள்ளிப்பருவத்திலே விதைக்கவேண்டும் என்றால் அதற்கு இந்த நாடகம் பெரிதும் துணை நிற்கும்.

படங்கள் உதவி:காளீஸ்வரன்

-எல்.முருகராஜ்

.






      Dinamalar
      Follow us