sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

புகை பிடிப்பதை விட்டால் புற்றுநோய் அபாயம் குறையும்

/

புகை பிடிப்பதை விட்டால் புற்றுநோய் அபாயம் குறையும்

புகை பிடிப்பதை விட்டால் புற்றுநோய் அபாயம் குறையும்

புகை பிடிப்பதை விட்டால் புற்றுநோய் அபாயம் குறையும்


PUBLISHED ON : மார் 29, 2026

Google News

PUBLISHED ON : மார் 29, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமலர் நாளிதழ் மற்றும் கே.எம்.சி.எச்., இணைந்து 'நலம் பேசுவோம் - நலமுடன் வாழ்வோம்' என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. ' என்ன செய்யலாம்.. புற்றுநோய் வரும் முன்..வந்தபின்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில் கேள்விகளும், டாக்டர்கள் விளக்கங்களும்.

கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பிரமணியம்

70 வயதுக்கு மேல் புற்றுநோய் என்பது அதிகம் வருமா, ஆரம்ப நிலையில் கண்டறிய இயலுமா?

முதுமையில் பொதுவான அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் டாக்டர்களை சந்தித்தால் நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம். ஏதேனும் புண் ஆறாமல் இருப்பது, கட்டி பெரிதாவது கவனிக்க வேண்டிய ஒன்று. தொடர் இருமல், சளி, ரத்தம், சிறுநீர் அதிகம் வெளியேறுவது, பசியின்மை, எடை குறைதல் ஆகிய எந்த அறிகுறியாக இருந்தாலும் பரிசோதித்து புற்றுநோயா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்.



கதிர்வீச்சு சிகிச்சை அனைவருக்கும் பொருந்துமா, இது வலிதரும் சிகிச்சையா?

எக்ஸ்ரே கதிர்கள் வழியாக கட்டியை கரைக்கும் கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோய்க்கான முக்கியமான ஒன்று. இதில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. துல்லியமாக கதிர்வீச்சு தேவைப்படும் இடத்துக்கு மட்டும் செலுத்தும் தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அனைவருக்கும் இச்சிகிச்சை அவசியம் இல்லை. மூக்கு, தொண்டை, கர்ப்பப்பை வாய், நுரையீரல், மலக்குடல் ஆகிய புற்றுநோய்க்கு இது தேவைப்படுகிறது. 50-60 சதவீதம் பேருக்கு தேவைப்படும். இதனால், ஏற்படும் பக்கவிளைவுகள் தற்காலிகமானதே.

காது, மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் திவாகர்

வாய், தொண்டை புற்றுநோய் ஏற்பட புகையிலை பழக்கம் தவிர்த்து வேறு காரணங்கள் உள்ளதா?

புகைபிடித்தல் வாய், தொண்டை, கழுத்து பகுதி புற்றுநோய் ஏற்பட மிக முக்கிய காரணம். மது, பாக்கு, சுண்ணாம்பு போன்ற அனைத்து தீய பழக்கங்களும் காரணமே. நோய் பாதிப்புக்குள்ளாகும் 100 பேரில் 65 பேருக்கு இதன் காரணமாகவே வாய், தொண்டை புற்றுநோய் ஏற்படுவதை உறுதி செய்துள்ளோம்.

நாக்கில் கட்டி போன்று ஓராண்டாக உள்ளது, வலியோ ரத்தமோ வரவில்லை இதற்கு உங்கள் வழிகாட்டல் என்ன?



நாக்கில் புற்றுநோய் கட்டி இருந்தால் வலி ஏற்படும். ஓராண்டு என்பது யோசிக்க வைக்கும் படி உள்ளதால், வலி இல்லை என்றாலும் தாமதிக்காமல் டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்.

நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தகுமார்

நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன?

இயல்பாக நம் உடலில் செல் கட்டுப்பாடற்று வளர்ந்து, கட்டிகளாக மாறுவதே புற்றுநோய். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் புகைப்பிடித்தல் தான். நேரடியாக புகை நுரையீரலுக்கு செல்வதால் பாதிப்பு ஏற்படுத்துகிறது. புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பவர்கள், மாசுபட்ட இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பரம்பரை காரணங்களாலும் இப்பாதிப்பு வரவாய்ப்புண்டு.

அறிகுறிகள் என்ன

நாள்பட்ட இருமல், இருமலில் ரத்தம் வருதல், மூச்சுத்திணறல், காரணமின்றி எடை குறைதல், போன்றவை பொதுவான அறிகுறிகள்.

சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பரணிக்குமார்

சிறுநீரகம் சார்ந்த புற்றுநோய் வர அறிகுறிகள் என்னென்ன?

சிறுநீரக புற்றுநோய், சிறுநீரகம், சிறுநீரகப்பை, சிறுநீரக பாதையில் பாதிப்புகள் ஏற்படுத்தும். புகைப்பழக்கம், பூச்சிக்கொல்லி பயன்பாடு உள்ள இடங்களில் பணிபுரிதல், அதிக குடிபழக்கம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள். தீராத வயிற்று வலி, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், சிறுநீர் அடிக்கடி செல்தல், சிறுநீர் பாதையில் எரிச்சல் அலட்சியம் இன்றி டாக்டர்களை சந்திக்கவேண்டும்.

சிறுநீரக பாதுகாப்புக்கு என்ன செய்யவேண்டும்?

நாள் ஒன்றுக்கு 1 முதல் 1.5 லிட்டர் சிறுநீர் வெளியேறவேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீங்கள் தண்ணீர் குடிப்பது போதுமானதாக இல்லை என அர்த்தம். வெளியிடங்களில், சூடான இடங்களில் பணிபுரிபவர்கள் கூடுதலாக தண்ணீர் குடிக்கவேண்டும். புகைப்பிடிப்பது கூடாது.

இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த்

இரைப்பை உள்ளிட்ட புற்றுநோய் முதன்மைஅறிகுறிகள் என்ன?

உணவு குழாய் பொறுத்தவரையில் உணவு விழுங்கும் போது அடைத்துக்கொள்ளும். இரைப்பையில் பாதிப்பு இருப்பின்சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிவிடும். வயிற்று வலி, எடை குறைதல், தீராத வாந்தி, குடல் புற்றுநோயில் மலத்தில் ரத்தம், பேதி, ரத்தம் வெளியேறி ரத்த சோகை ஆவது ஆகியவை முக்கிய அறிகுறிகள். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் டாக்டரை சந்திக்கவேண்டும்.






      Dinamalar
      Follow us