தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/கெடுதல் செய்யாத கெட்ட கொழுப்பு!

கெடுதல் செய்யாத கெட்ட கொழுப்பு!

கெடுதல் செய்யாத கெட்ட கொழுப்பு!


PUBLISHED ON : மார் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரத்தத்தில் கெட்ட கொழுப்பான எல்.டி.எல்., டிரைகிளிசரைடு எனப்படும், தேவைக்கு அதிக கலோரி வாயிலாக உடலில் சேரும் கொழுப்பு ஆகிய இரண்டின் அளவும் அதிகம் இருந்தால் அவ்வளவு தான். நம்மையும் அறியாமல் ஒரு பயம் வந்து விடுகிறது. அதற்கு ஏற்றாற்போல டாக்டர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், கொழுப்பை குறைக்க பலவித ஆலோசனைகள் சொல்கின்றனர்.

சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவுகள், நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல்., கெட்ட கொழுப்பு டிரைகிளிசரைடு ரத்தத்தில் எந்த அளவு உள்ளது என்பதை வைத்து, மாரடைப்பு, பக்கவாதம் வரும் என்பதை சொல்லவே முடியாது என்கிறது.

அதன் விபரம்

ரத்தத்தில் உள்ள மெழுகு போன்ற அடர்ந்த கொழுப்பு பொருள், அதன் மூலக்கூறுகளை பொறுத்து, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, டிரைகிளிசரைடு உட்பட பல வகைகளாகவும், உட்பிரிவுகளாகவும் உள்ளன.

உடல் செல்களுக்கு சக்தி தருவதில் துவங்கி, 44 வகை உடல் செயல்பாடுகளுக்கு அவசியமானது கொழுப்பு. மூளை வளர்ச்சிக்கு அவசியமான, 'ஏ, டி, இ, கே' ஆகிய வைட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. சில கொழுப்பு வகைகள், இதய, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. வலிமையான எலும்பு உற்பத்திக்கு தேவையான ஹார்மோன்களை சுரப்பதற்கும் கொழுப்பு அவசியம்.

கெட்ட கொழுப்பு

கெட்ட கொழுப்பில் உள்ள நுண்ணிய துகளான ,'அபோலிபோ புரதம் -பி' தான் ஆபத்தானவை. இவை, நாம் உபயோகிக்கும் எண்ணெய், சாப்பிடும் விலங்கு மாமிசத்தில் உள்ளன. இவை, கொழுப்பின் நுகர்வில் வெறும் 2 -- 8 சதவீதம் மட்டுமே. இதை தவிர்த்தால் போதுமானது. அதை விடுத்து, கொழுப்பு என்று சொன்னாலே பயந்து அலற வேண்டியதில்லை. இதை தவிர்த்து, மீதமுள்ள கொழுப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. இதயம், மூளை ரத்த நாளங்களை பாதுகாக்கிறது.

பரிசோதனை

ரத்த கொழுப்பின் அளவை தெரிந்து கொள்ள பொதுவாக செய்யப்படும், 'லிபிட் புரபைல்' பரிசோதனையில், 'அபோ லிபோ புரதம் -பி' உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியாது. இதற்கென்று பிரத்யேக பரிசோதனைகள் தேவை. அதற்கு மிக அதிக செலவு பிடிக்கும்.

என்ன செய்யலாம்?

கொழுப்பை பற்றி அதிகமாக கவலைப்படாமல், உடல் பருமன் இல்லாமல், உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் இருக்கவே கூடாது. ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

தினசரி உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சியை தவிர்க்கவே கூடாது. 30 -- 40 நிமிடங்கள், ஒரு மணி நேரத்திற்கு, 3 கி.மீ., என்ற அளவிற்கு வேகமாக நடக்க வேண்டும். 10 நிமிடம் வேகமாக, 10 நிமிடம் மிதமாக என்று நடக்கலாம்.

நடை பயிற்சியின் போது மொபைல் பார்ப்பது, பேசுவது என்று எதுவும் செய்யக்கூடாது. இதை தினசரி ஒழுங்காக கடைப்பிடித்தால், மாரடைப்பு, பக்கவாதம் என்று எதுவும் வராது.

டாக்டர் நாகேந்திரன் தினகரன்,

இரைப்பை குடல் சிறப்பு மருத்துவ நிபுணர்,

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம்,

மேல்மருவத்துார்,

98411 51599


nagudeena@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us