sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

பத்திரப்பதிவுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதில் உள்ள நடைமுறைகள் என்ன?

/

பத்திரப்பதிவுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதில் உள்ள நடைமுறைகள் என்ன?

பத்திரப்பதிவுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதில் உள்ள நடைமுறைகள் என்ன?

பத்திரப்பதிவுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதில் உள்ள நடைமுறைகள் என்ன?


ADDED : பிப் 03, 2024 09:17 AM

Google News

ADDED : பிப் 03, 2024 09:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொத்துக்களை வாங்குவதிலோ, விற்பதிலோ இல்லை நம் திறமை. அதை முறைப்படி பதிவு செய்வதில்தான் உள்ளது நம் கடமை. பத்திரப்பதிவு என்பது சொத்துக்களை வாங்குவது, விற்பது என இரு பகுதியிலும் முக்கியமான ஒன்று. அசையா சொத்துக்களை விற்பதில் அதை முறையாக பத்திரப்பதிவு செய்வது அவசியம்.

இதில் விற்பனைக்கு முன்பே வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று பார்த்து இருப்பார்கள். ஆனாலும், பத்திரப்பதிவுக்கு சார்-பதிவாளர் அலுவலகம் செல்லும் போது, உங்களுக்கு முன்னதாக வேறு ஒருவர் அதில் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்து இருக்கலாம்.

கடைசி நிமிடத்தில் இது போன்ற சிக்கல்கள் எழுந்தால் வீடு, மனை வாங்குவோர் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். பத்திரப்பதிவு என்பதற்கு சில வழிமுறைகள் உண்டு. ஒரு நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் பல படிகள் உண்டு. அதையும் மீறி ஆட்சேபனை செய்ய முன் வருகின்றார்கள் என்றால் அதை நாம் சரி செய்துக் கொள்ள வேண்டும்.

பதிவுக்கு முன்னதாக அதன் சட்டம் மற்றும் அலுவலக நடைமுறைகளை அறிந்துக் கொள்ள வேண்டும். வழிகாட்டு மதிப்புக்கேற்று தான் பத்திரம் வாங்கியுள்ளோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நாம் எவ்வளவு மார்க்கெட் விலைக்கு வாங்குகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும். அந்த மதிப்பிற்கு தான் பதியவேண்டும் என்று சட்டம் சொல்லவில்லை.

ஏனெனில் அரசுக்கு தெரியும், நடுவில் சில இடைத்தரகர் புகுந்து வேண்டுமென்றே கூடுதல் விலைக்கு பதிந்து, அங்குள்ள வழிகாட்டு மதிப்பை உயர்த்த வைப்பர் என்று, இன்னொன்று சில இடங்களில் மார்க்கெட் மதிப்பை விட வழிகாட்டு மதிப்பு அதிகம்!

பத்திரத்தில் சொத்து குறித்த விபரங்களை, அதன் பூர்வீக விவரங்களுடன் கிரையம் செய்பவருக்கு உள்ள உரிமை குறித்த விபரங்கள் உள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஓட்டை தான் பின்னால் நிறைய சட்ட சிக்கலுக்கு வழிவகுக்கும்.

பதிவுக்கு உண்டான சரியான கட்டணத்தை தான் செலுத்துகிறோமா என்பதையும் தெரிந்து கொள்வது நலம். இரண்டு தரப்பும் சாட்சிகளுடன் போதிய ஆவணத்துடன் தான் பதிவு அலுவலகத்தில் உள்ளோமா என்பதையும் தெளிவு படுத்திக்கொள்வோம்.

இவ்வளவு நடைமுறையையும் சரியாக செய்து, பதிவு செய்தால், அதை மறுக்க பதிவாளருக்கே அதிகாரம் இல்லை. இதில் முதலில், பத்திரப்பதிவுக்கு யார், எப்படி ஆட்சேபனை செய்யலாம் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக குடும்ப சொத்துக்களில் உரிமை உள்ள ஒருவர் அதை விற்பனை செய்யும் போது, அதே குடும்பத்தை சேர்ந்த மற்ற நபர்கள் ஆட்சேபனை செய்ய வாய்ப்புள்ளது. அதனால், ஆட்சேபனை செய்வோர் தங்களுக்கு அந்த சொத்தில் உள்ள உரிமை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

பல இடங்களில், சொத்துக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத நபர்கள் கூட ஆட்சேபனை மனுக்கள் அளிக்கின்றனர். இது போன்ற ஆட்சேபனை மனுக்களை சார்-பதிவாளர்கள் எப்படி கையாள வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. உரிய ஆதாரங்கள் எதுவும் இன்றி அளிக்கப்படும் தடை மனுக்களை சார்-பதிவாளர்கள் அனுமதிக்க கூடாது.

இதுனால் உண்மையான பத்திரப்பதிவுக்கு வருவோர் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. தடை மனு அளிக்கும் நபர், அவரது பெயரில் கிரையம் பெற்ற அல்லது சொத்து பெற்றதற்கான ஆவண நகலை மனுவுடன் இணைக்க வேண்டும்.

தடை மனுவை ஆய்வு செய்யும் போது, இணைப்பில் உள்ள நகலின் அசல் ஆவணங்களை சார்-பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட சொத்து தடை மனு அளிப்பவருக்க எந்த வகையில் பதியப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

இது போன்ற உரிய ஆதாரங்கள் இல்லாத தடை மனுக்களை விசாரணைக்கு ஏற்க வேண்டாம் என சார்-பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் பத்திரப்பதிவு குறித்து தகவல் தெரிந்து கொண்டு எவ்வித ஆதாரமும் இல்லாமல் தடை மனுக்கள் அளிக்கின்றனர்.

இதில், சில சார்-பதிவாளர்கள் வேண்டுமென்றே தடை மனுக்களை பதிவு செய்து, பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் பேரம் பேசும் நிகழ்வுகளும் நடக்கின்றன. எனவே, புதிதாக சொத்து வாங்குவோர், அது தொடர்பாக யாராவது தடை மனு அளித்துள்ளனரா என்பதையும் விசாரித்து தெளிவு பெற வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

கவனிக்க

குறிப்பிட்ட நாட்களுக்கு மேல், பதிவு செய்யாமல், அவர்கள் எந்தபத்திரத்தையும் வைத்திருக்க முடியாது. பதிவு செய்ய இயலாத காரணத்தை எழுத்து மூலமாக, விளக்கி ஆவணத்தை அவர்கள் திருப்ப வேண்டும்.








      Dinamalar
      Follow us