/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கான்கிரீட் போட்டதுடன் மொட்டை மாடியை அப்படியே விடாதீர்கள்!
/
கான்கிரீட் போட்டதுடன் மொட்டை மாடியை அப்படியே விடாதீர்கள்!
கான்கிரீட் போட்டதுடன் மொட்டை மாடியை அப்படியே விடாதீர்கள்!
கான்கிரீட் போட்டதுடன் மொட்டை மாடியை அப்படியே விடாதீர்கள்!
ADDED : டிச 20, 2025 07:28 AM

பொதுவாக பெரும்பாலான மக்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் மேல்தளம் தரமாக அமைய வேண்டும் என்று நினைக்கின்றனர். இது விஷயத்தில் உங்கள் நினைப்பு மட்டும் முழுபலனை கொடுத்துவிடாது, செயல்பாட்டில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
கட்டுமான பணியில் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள், மேல்தளம் ஆகியவற்றுக்கு முறையாக ஷட்டரிங் தடுப்புகள் அமைப்பது, சரியான கம்பிகளை அமைப்பது, தரமான கான்கிரீட் வாங்குவதில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். இதில், இறுதி கட்டம் என்ற நிலையில் கோட்டைவிடுவதை பரவலாக பார்க்க முடிகிறது.
குறிப்பாக, தரமான கம்பிகள், கான்கிரீட்டை பயன்படுத்தினாலும், துாண்கள், பீம்கள் ஆகியவற்றுக்கு அப்பால் மேல் தளத்துக்கான பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்ட பட்ஜெட்டை விட கூடுதல் செலவு ஏற்பபட்டது போன்ற காரணங்களால், மேல் தளத்தில் கான்கிரீட் போடும் பணிக்கு மேல் முறையாக பினிஷிங் கொடுக்க மக்கள் மறந்து விடுகின்றனர்.
பொதுவாக கட்டடத்தில் மேல் தளத்துக்கான கான்கிரீட் போடும் பணிகளில் முறையாக பினிஷிங் வருவது என்பது மிக மிக முக்கியம். இதில், மேல் தளத்தில் தரமான முறையில் கான்கிரீட் அமைத்து அதில் உரிய கால அவகாசத்தில் கியூரிங் பணிகள் முடிந்து விட்டது என்று அமைதியாக இருந்துவிடாதீர்கள்.
இதன் பின்னர், மேல் தளத்தின் மேற்பகுதியில் கட்டுமான பணியாளர்கள் சிலரின் பேச்சை கேட்டுக்கொண்டு லேசான பூச்சு வேலை மேற்கொள்வது நல்லதல்ல. இந்த கான்கிரீட் ஸ்லாப் மீதி முதலில் சமதளம் சரியாக அமைந்துள்ளதா என்பதை துல்லியமாக சரி பாருங்கள்.
அதில், மேல் தளத்துக்கு மேற்பகுதியில் நீர்க்கசிவு தடுப்புக்கான பணிகளில் பெரும்பாலான மக்கள் சரியான கவனம் செலுத்துவதில்லை. மொட்டை மாடி பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொண்டால் போதும், வேறு என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது என்று மக்கள் நினைக்கின்றனர்.
உண்மையில் இது விஷயத்தில் மேல் தளம் அமைத்த பின், அதில் லேசான பூச்சு வேலை மேற்கொள்வதுடன், சொருகு ஓடு அமைப்பது அல்லது கூல் ரூப் டைல்ஸ் அமைப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல இடங்களில் கட்டுமான பணிகள் பட்ஜெட்டை தாண்டி சென்ற நிலையில், இது போன்ற சில பணிகளை தற்காலிகமாக ஒத்தி போடுகின்றனர்.
இந்த பணிகளை தற்காலிக அடிப்படையில் ஒத்தி வைப்பது மிக பெரிய பிரச்னையை, கட்டடத்துக்கு ஏற்படும். பொதுவாக கட்டடத்தின் மேல்தளத்தில் கான்கிரீட் போட்ட பின் நீராற்றும் பணிகள் நடந்தாலும், மெல்லிய துவாரங்கள் அதிகமாக காணப்படும்.
மேல் தளத்தை பாதுகாப்பதற்கான கவசமாக சொருகு ஓடுகள், கூல் ரூப் பதிகற்கள் அமைகின்றன என்பதை மக்கள் சரியாக புரிந்து செயல்பட வேண்டும். அப்போது தான் கட்டடத்தில் நீர்க்கசிவு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்கின்றனர், கட்டுமான துறை பொறியாளர்கள்.
கட்டடத்தின் மேல் தளத்துக்கான கான்கிரீட் போடும் பணிகளில் முறையாக பினிஷிங் வருவது என்பது மிக மிக முக்கியம், கான்கிரீட் போட்டபின் போதிய கால அவகாசம் கொடுத்து முறையாக கியூரிங் மேற்கொள்வது அவசியம்.

