/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
கட்டட உறுதியை ஆண்டுதோறும் பரிசோதிப்பது அவசியம்!
/
கட்டட உறுதியை ஆண்டுதோறும் பரிசோதிப்பது அவசியம்!
ADDED : பிப் 03, 2024 09:18 AM

நமது வாழ்க்கை முறையில் பல்வேறு விஷயங்களை திட்டமிட்டு செய்வதை பழக்கமாக கொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் துவங்கி, உடல் பரிசோதனை என பல விஷயங்களில் திட்டமிடல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதே போன்று கட்டட பராமரிப்பிலும் தெளிவான திட்டமிடல் அவசியமாகிறது. ஒரு வீட்டை வாங்கி குடியிருக்கிறோம் என்றால் அதை பராமரிப்பதில் முறையாக செயல்பட வேண்டும்.
பெரும்பாலானோருக்கு புதிய வீடு வாங்கும் போது அதன் மீது இருக்கும் ஆர்வம் இயல்பு நிலை பராமரிப்பில் இருப்பதில்லை. இதனால், பல்வேறு புதிய பிரச்னைகள் திடீரென வந்துவிடுகின்றன. பிரச்னை வரும் போது, பார்த்துக்கொள்ளலாம் என்று அசட்டையாக இருப்பது நல்லதல்ல. இத்தகைய அசட்டையால் எதிர்பாராத விபத்துகளின் போது பெரிய இழப்புகளை சந்திக்க வேண்டிவரும்.
கட்டடங்களில், மின்சார இணைப்புகள் விஷயத்தில் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பொது சோதனை தேவை. இதன்படி, ஒயரிங் இணைப்புகளில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா, சுவிட்ச்கள், பிளக் பாயிண்ட்களில் உடைப்புகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
ஒயரிங் தொடர்பான இடங்களில் ஏதாவது குறைபாடு தெரியவந்தால் அதை உடனடியாக சரி செய்வது அவசியம். சரியாக செயல்படாத சுவிட்ச்கள், காலாவதியான பல்புகளை அப்புறப்படுத்த வேண்டும். அதே போன்று, பிளம்பிங் வழித்தடங் கள், இணைப்புகள், குழாய் திறப்புகள், வால்வுகள் போன்றவற்றை சரி பார்ப்பது அவசியம். இதில் கசிவுகள் தெரியவந்தால் உரிய நபர்களை அழைத்து சரி செய்ய வேண்டும்.
மேல்நிலை தண்ணீர் தொட்டி, கீழ் நிலை தண்ணீர் தொட்டி, மோட்டார் அறைகள் ஆகியவற்றில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். இந்த விஷயங்களில் துளியும் அலட்சியம் காட்டாதீர். இத்துடன் கட்டடத்தில் ஏதாவது நீர்க்கசிவு பிரச்னைகள் இருக்கிறதா என்று சோதித்து பார்க்க வேண்டும். விரிசல்கள், நீர்க்கசிவு இருப்பது தெரியவந்தால் பொறியாளரை அழைத்து சரி செய்ய வேண்டும்.
கட்டட பராமரிப்பு விஷயத்தில் சமரசம் இன்றி செயல்பட்டால் உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்யலாம். இதில் தேவை அடிப்படையில் உரிய நபர்களை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

