sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

இருக்கும் இடத்திலிருந்தே டி.எஸ்.எல்.ஆர்., பெறலாம்!

/

இருக்கும் இடத்திலிருந்தே டி.எஸ்.எல்.ஆர்., பெறலாம்!

இருக்கும் இடத்திலிருந்தே டி.எஸ்.எல்.ஆர்., பெறலாம்!

இருக்கும் இடத்திலிருந்தே டி.எஸ்.எல்.ஆர்., பெறலாம்!


ADDED : அக் 11, 2024 11:38 PM

Google News

ADDED : அக் 11, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலம் சம்பந்தமான சேவைக்கு, எந்த ஒரு அரசு அலுவலகத்தை அணுகினாலும் அவசியம் கேட்கப்படுவது 'டவுன் சர்வே லேண்ட் ரெக்கார்டு' எனப்படும், டி.எஸ்.எல்.ஆர்.,ஐ தான்.

விண்ணப்பத்திற்கு சம்பந்தப்பட்ட நிலத்தின் விபரங்களான சர்வே எண், உட்பிரிவு எண், சர்வே வார்டு எண், பிளாக், பரப்பளவு, வகைப்பாடு, உரிமையாளர்களின் பெயர் ஆகியவை, இந்த டி.எஸ்.எல்.ஆர்.,ல் காணப்படும்.

ஒவ்வொரு முறையும், நில உரிமையாளர் மாறும்போது, அவரின் பெயர் டி.எஸ்.எல்.ஆர்.,ல் பதிவிடப்படும். இதை செய்வதும், டி.எஸ்.எல்.ஆர்.,ஐ பாதுகாப்பதும் வருவாய் துறை.

வருவாய் துறை உடனுக்குடன் பெயர் சேர்க்காவிட்டால் தற்போதைய நில உரிமையாளரை கண்டறிவது சிரமமே.

இதுகுறித்து, பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:

நிலம் அரசு ஆர்ஜிதம் செய்வதற்கான நஷ்டஈடு டி.எஸ்.எல்.ஆர்., இருப்பவருக்கே உரிமையானது. மாநகராட்சி அல்லது வருவாய் துறைக்கு சென்று, டி.எஸ்.எல்.ஆர்.,ஐ பெற வேண்டிய நிலைமாறி விட்டது.

இணையம் வழியாக வீட்டில் இருந்தே, பதிவிறக்கம் செய்துகொள்ள அரசு வசதி ஏற்படுத்தி தந்துள்ளது; அதுவும் இலவசமாக. எந்த அலுவலகத்துக்கும் செல்லவேண்டியதில்லை.

இந்த ஆவணம், எல்லா அரசு துறைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும். எவரிடமும் கையொப்பம் பெறவேண்டியதில்லை.

நிலம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும், ஆவணங்களையும் clip.tn.gov.in, eservices.tn.gov.in ஆகிய இரு தளங்களில் இருந்து பெறலாம்.

எந்த நிலம் என்பதை குறிப்பிட, அதன் டவுன் சர்வே எண், சர்வே வார்டு எண், பிளாக் எண் ஆகியவை அவசியம். டவுன் சர்வே எண் சமீபகாலமாகத்தான் கிடைக்கிறது.

பெரும்பாலான சொத்து ஆவணங்களில், 'சர்வே பீல்ட்' அல்லது காலை எண், அதன் உட்பிரிவு மற்றும் சர்வே கிராமத்தின் பெயரே இருக்கும்.

tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தில், 'correlation statement' அழுத்தி, மாவட்டம், தாலுகா, டவுன் ஆகியவற்றை அளித்தால், அனைத்து காலை எண்களுக்கும் உண்டான புதிய வார்டு, பிளாக், டவுன் சர்வே மற்றும் அதன் உட்பிரிவு எண் ஆகியவை கிடைக்கும்.

கோவை மாநகராட்சியை பொருத்தவரை, கோவை வடக்கு, தெற்கு என்றே பிரிக்கப்பட்டுள்ளது. இதே விவரங்களை பயன்படுத்தி, coimbatorelpa.com என்ற தளத்திலிருந்து முழு திட்ட வரைவு விவரங்களையும், வரைபடங்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.

சார்பதிவாளர்கள் மற்றும் டி.டி.சி.பி., அலுவலர்கள், பதிவிறக்கம் செய்யக்கூடிய ஆவணங்களை விண்ணப்பதாரரிடம் இருந்து எதிர்பார்க்காமல், இணையதளத்தில் இருந்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதால், இதுவும் எளிமையே.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us