குபோட்டா 'சவுரியா சீரிஸ்' டிராக்டர் 39 முதல் 52 ஹெச்.பி., வரை ஐந்து மாடல்
குபோட்டா 'சவுரியா சீரிஸ்' டிராக்டர் 39 முதல் 52 ஹெச்.பி., வரை ஐந்து மாடல்
ADDED : மே 20, 2026 07:39 AM

'எஸ்கார்ட்ஸ் குபோட்டா' நிறுவனம், 'சவுரியா சீரிஸ்' டிராக்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.
பயன்பாடு: நெல் அறுவடைக்கு நிலத்தை தயார் படுத்துதல்.
39 முதல் 52 ஹெச்.பி., இன்ஜின் பவரை வெளிப்படுத்தும் ஐந்து மாடல்களில் இந்த டிராக்டர் வந்துள்ளது. இது, டீசல் இன்ஜினில் மட்டும் வருகிறது. இந்த இன்ஜினுடன், 8 - ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு ரிவர்ஸ் கியர்களும் உள்ளன. சேற்று வயல்களில் எந்த இயந்திர கோளாறு ஏற்படாமல் செயல்படும் வகையில் இந்த டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிராக்டர் பின்புறத்தில் பொருத்தப்படும் இணைப்புகளை கையாள, ஹைட்ராலிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது, 1,600 முதல் 2,000 கிலோ வரை உள்ள இணைப்புகளை சுமக்கும் திறன் உடையது. 3.1 மீ டர்னிங் ரேடியஸ் உள்ள இந்த டிராக்டரை, சிறிய வயல்களில் எளிதாக திருப்ப முடியும். ஓட்டுநர் சோர்வடையாமல் நீண்ட நேரம் ஓட்டும் வகையில், ஸ்லைடிங் சீட் உட்பட பல அம்சங்கள் இதில் இருக்கின்றன.
