ADDED : ஜூன் 12, 2024 08:16 AM

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'ஆல்ட்ரோஸ் ரேஸர்' என்ற புதிய மாடல் ஹேச்பேக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், ஹூண்டாய் ஐ-20 என்-லைன் காருக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.
சாதாரண ஆல்ட்ரோஸ் காரை ஒப்பிடுகையில், இந்த கார் மிகவும் ஸ்போர்ட்டியான முறையில் காட்சியளிக்கிறது. இதன் இன்ஜின் செயல்திறன் நெக்ஸான் காருக்கு இணையாக அதிகரிக்கப்பட்டு, ஹேச்பேக் கார்களில் மிகவும் சக்திவாய்ந்த காராகவும் விளங்குகிறது. இந்த கார், 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸில் மட்டுமே வருகிறது.
ஹேச்பேக் கார்களில், முன்புற வென்டிலேட்டட் சீட்கள் கொடுக்கப்படும் முதல் கார் இதுவே. கூடுதலாக, 10.25 அங்குல இன்பொடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் டோன் வெளிப்புற மற்றும் உட்புற நிறம், புதிய சொகுசு லெதர் சீட்டுகள் ஆகியவையும் கொடுக்கப்படுகிறது. மற்றபடி இந்த காரில் வேறு எந்த மாற்றமும் இல்லை.
விலை: ரூ.9.49 லட்சம் - ரூ.10.99 லட்சம்

