sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

'மசாஜ்' சென்டர்களில் நடக்கிறது 'கசமுசா' கமிஷன் கேட்கிறார் கார்ப்பரேஷன் சேர்மன்!

/

'மசாஜ்' சென்டர்களில் நடக்கிறது 'கசமுசா' கமிஷன் கேட்கிறார் கார்ப்பரேஷன் சேர்மன்!

'மசாஜ்' சென்டர்களில் நடக்கிறது 'கசமுசா' கமிஷன் கேட்கிறார் கார்ப்பரேஷன் சேர்மன்!

'மசாஜ்' சென்டர்களில் நடக்கிறது 'கசமுசா' கமிஷன் கேட்கிறார் கார்ப்பரேஷன் சேர்மன்!


ADDED : ஜன 02, 2024 02:14 AM

Google News

ADDED : ஜன 02, 2024 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.

கேக் பார்சலுடன் வந்த மித்ரா, 'அக்கா, விஷ் யூ ஹேப்பி நியூ இயர்' என, வாழ்த்து சொன்னபடி, வீட்டுக்குள் நுழைந்தாள்.

''என்னடி மித்து! நியூ இயர் கொண்டாட்டம் தடபுடலா... கூட்டம் செம ஜாஸ்தியா இருந்துச்சாமே...''

''ஆமாக்கா... இவ்ளோ கூட்டம் எதிர்பார்க்கலை. வாலாங்குளத்தின் கரையில் ஏற்பாடு செஞ்ச நிகழ்ச்சி அமர்க்களமா இருந்துச்சு; நகர்ந்து செல்லக் கூடிய முடியாத அளவுக்கு கூட்டம் இருந்துச்சு. 'லேசர்' ஷோ, 'டிரோன்' ஷோன்னு அசத்திட்டாங்க... இதே மாதிரி, ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலையில் குடும்பம் குடும்பமா மக்கள் சுத்தி வந்தாங்க... ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணாங்க...''

மிரட்டியது யாரோ


''வாலாங்குளத்துல நிகழ்ச்சி நடத்துறதுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சாங்களே...''

''ஆமா... கலெக்டர் ஆபீசிலும் மனு கொடுத்தாங்க. நிகழ்ச்சி நடத்துன தனியார் அமைப்பினரை மிரட்டவும் செஞ்சிருக்காங்க; போலீசுல கம்ப்ளைன்ட் ஆகியிருக்கு. நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சதே, கார்ப்பரேஷன் ஸ்மார்ட் சிட்டி டீம்தான். இருந்தாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துக்காக, 'ஹீலியம் பலுான்' பறக்க விடுறதையும், பட்டாசு வெடிக்கறதையும் நிறுத்திட்டாங்க,''

''மித்து, வாலாங்குளத்தை ஆக்கிரமிச்சு தான் ரெண்டு இடத்துல கவுர்மென்ட் பஸ் டிப்போ கட்டியிருக்காங்க; அரசு பஸ்களை கழுவுற கழிவு தண்ணீ, எண்ணெய் கழிவெல்லாம் குளத்துக்கு தான் வருது; அதே மாதிரி, ஜி.எச்.,ல இருந்து வெளியேத்துற கழிவு தண்ணீயும், இந்த குளத்துக்கு வருது. இதைப்பத்தியெல்லாம், சுற்றுச்சூழல் ஆர்வலரா இருக்கறவங்க கவலைப்பட்டதா தெரியலை,''

ஊக்கம் தராத ஆபீசர்


''அக்கா... 'மிக்ஜாம்' புயல், பெருவெள்ளத்துல சென்னையே மிதந்தப்போ, நம்மூர் கார்ப்பரேஷன்ல இருந்து கமிஷனர் தலைமையில, துாய்மை பணியாளர்கள் போனாங்களே...''

''ஆமாப்பா... அவுங்க சேவையை பாராட்டி, கவர்மென்ட் ரூ.4,000 ஊக்கத்தொகை கொடுத்துச்சே...,''

''அதைத்தாங்க சொல்ல வர்றேன். கவர்மென்ட் கொடுத்த தொகையை, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் கொடுக்க மாட்டேங்கிறாங்களாம். வெஸ்ட் ஜோன்ல இருக்கற ஆபீசர்ஸ், நாள் 'கணக்கு' பார்த்து ஊக்கத்தொகையை தர மறுக்குறாங்களாம். கமிஷனரிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்,''

டீச்சர்ஸ் அதிருப்தி


''கார்ப்பரேஷன் கமிஷனர் மேல, ஸ்கூல் டீச்சர்ஸ் பலரும் அதிருப்தியில இருக்காங்களாமே...''

''ஆமாப்பா... உண்மைதான்! ஸ்கூலுக்கு ஆய்வுக்கு வர்ற சமயத்துல... எப்படி டீச்சிங் பண்றாங்கன்னு மட்டும் கேக்குறாராம். அந்த ஸ்கூலுக்கு என்ன தேவை; டாய்லெட் வசதி இருக்கா; தண்ணீ வருதா; குடிநீர் வசதி இருக்கா; காலை சிற்றுண்டி சரியான நேரத்துக்கு வருதா... டீச்சர்ஸ் பணியிடம் காலியா இருக்கான்னு கேக்கறதில்லையாம்,''

மன வருத்தம்


''மினிஸ்டர் ஆபீஸ் ஆட்கள் மனவருத்தத்துல இருக்கறதா கேள்விப்பட்டேனே...''

''அதுவா... மினிஸ்டர் ஆபீஸ்ல இருந்து அப்பப்போ சில வாய்மொழி உத்தரவுகள் வரும். தலையாட்டிட்டு பைல்ல கையெழுத்து போடணுங்கிறது எழுதப்படாத விதி; இல்லேன்னா... பதவிக்கே ஆபத்தாகிடும். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, இன்னும் மூணு வருஷம் முடியலை; கார்ப்பரேஷன்ல இப்போ இருக்கற ஆபீசர் மூணாவதா வந்தவரு. பைல்களில் கையெழுத்து போடுறதுக்கு முரண்டு பிடிக்கறதுனால, இவரையும் மாத்துறதுக்கு 'நோட்' அனுப்பி இருக்காங்களாம்,''

''லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்கு முன்னாடி, ஐ.ஏ.எஸ்., ஆபீசர்ஸ் மாற்றம் வருமாம்; அப்போ, சில ஆபீசர்களை துாக்கிடுவாங்கன்னு பேசிக்கிறாங்க. நம்மூரு அதிகாரியையும் கழட்டி விடுறதுக்கு, திரைமறைவு வேலைகளை இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க...''

''கார்ப்பரேஷன்ல வேலை செய்ற கான்ட்ராக்டர்ஸ், இரு பிரிவா ஓட்டல்ல கூட்டம் நடத்தி பேசுனாங்களாமே...''

''அதுவா... கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர்ஸ் ரெண்டு குரூப்பா செயல்படுறாங்க... ஏ.டி.எம்.கே., ஆதரவாளர்கள் தனியாவும், டி.எம்.கே., ஆதரவாளர்கள் தனியாவும் கூட்டம் நடத்தியிருக்காங்க. அதுல, வேலைய முழுசா முடிக்காம மறுபடியும் டெண்டர் எடுக்காதீங்கன்னு அட்வைஸ் பண்ணியிருக்காங்க,''

கமிஷன் கேட்கும் சேர்மன்


''ஆளுங்கட்சி கவுன்சிலர்களிடமே ஜோன் சேர்மன் கமிஷன் கேக்குறாராமே...''

''அந்த கூத்தை ஏன் கேக்குற... ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலபேரு, பினாமி பெயருல கார்ப்பரேஷன் வேலை எடுத்து செய்றாங்க. இந்த வேலையை 'அலாட்' பண்றதுக்கும், 2 பர்சன்டேஜ் கமிஷன் தரணும்னு, 'இன்னோவா - கிரிஸ்டா' கார்ல வலம் வர்ற, ஜோன் சேர்மன் கறாரா சொல்றாராம். அதனால, அவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே 'வாய்க்கா தகராறு' ஏற்பட்டிருக்கு,''

''நெல்லையில மேயருக்கு எதிரா நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறிடுச்சுன்னா... நம்மூர்லயும் ஜோன் சேர்மனை மாத்தச் சொல்லி கடிதம் கொடுக்கப் போறாங்களாம்,''

கமிஷன் கொடுத்தா போதும்


''ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, புதுசா கட்டுன மழை நீர் வடிகால் அதுக்குள்ள டேமேஜ் ஆகிடுச்சாமே...''

''ஆமா... மித்து! நீ சொல்றது கரெக்ட் தான். அது, காரமடை முனிசிபாலிட்டியில நடந்திருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கட்டுன மழை நீர் வடிகால் டேமேஜ் ஆன கான்ட்ராக்டருக்கு, ஸ்கூல் பில்டிங் கட்டுற ஒர்க் கொடுத்திருக்காங்களாம்,''

''இதை கேள்விப்பட்டு, கவுன்சிலர்ஸ் பலரும் வேதனையில இருக்காங்க; மழை நீர் வடிகாலே இடிஞ்சு விழுந்துருச்சு; அந்த கான்ட்ராக்டர் ஸ்கூல் பில்டிங் கட்டுனா... குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்குமான்னு அச்சப்படுறாங்க... இதையெல்லாம் கண்டுக்காம கமிஷன் கொடுத்தா... தகுதியில்லாத கான்ட்ரக்டர்களுக்கு ஒர்க் ஆர்டர் கொடுக்குறாங்களாம்,''

பங்கு கொடுக்க தயக்கம்!


''கேரளா பார்டர்ல இருக்கற வேலந்தாவளம், வாளையார், மாங்கரை செக்போஸ்ட்டுல, நம்மூர் போலீஸ்காரங்க அடிக்கடி சோதனை நடத்துறாங்க. ஆயுதப்படையில இருந்து வர்ற போலீஸ்காரங்களை, ஸ்டேஷன் வேலைக்கு மட்டும் யூஸ் பண்றாங்களாம். செக்போஸ்ட் டூட்டிக்கு அழைச்சுட்டு போறதில்லையாமே,''

''செக்போஸ்ட்டுல கரன்சி கரைபுரண்டு ஓடுறதுல 'பங்கு' கொடுக்க வேண்டிய நெருக்கடி வரும்னு, அவுங்களை மட்டும் கழட்டி விட்டுட்டு, ஸ்டேஷன்ல டூட்டி பார்க்குற போலீஸ்காரங்க மட்டும் வசூல் தொகைய, பிரிச்சுக் கொடுக்குறாங்களாம். வசூல் குறைஞ்சிடக் கூடாதுன்னு இந்த ஏற்பாடாம்,''

''மித்து, இதே மாதிரி, மசாஜ் சென்டர் நடத்துறவங்க கிட்டே லட்சக்கணக்குல பறிக்கிறாங்களாமே...''

''ஆமாப்பா... சிட்டி லிமிட்டுக்குள்ள ஏகப்பட்ட 'ஸ்பா' நடக்குது; மசாஜ் தவிர சகலமும் நடக்குதாம். பீளமேடு, சிங்காநல்லூர், சரவணம்பட்டி ஏரியாவுல திரும்புற பக்கமெல்லாம் மசாஜ் சென்டர் உருவாகி இருக்கு. ஸ்டேஷன் மாமூல் ஆரம்பிச்சு... உயரதிகாரி வரைக்கும் கனகச்சிதமா 'அமவுன்ட்' போகுதாம். அதனால, மசாஜ் சென்டர்ல நடக்குற கசமுசாவை கண்டுக்கறதில்லையாம்,''

ஓசியும், ஏசியும்!


''ஓசி வண்டியை, 'ஏசி' துாக்கச் சொல்லிட்டாராமே...'' என கேட்டாள் மித்ரா.

''அதுவா... துடியலுாரைச் சேர்ந்த ஒருத்தரு மனைவிக்கு ஒடம்பு சரியில்லைன்னு நண்பர்கிட்ட பைக் வாங்கிட்டு, ஜி.எச்.,க்கு அழைச்சுட்டு வந்திருக்காரு. ட்ரீட்மென்ட் பார்த்துட்டு திரும்பி வந்தா, பைக்கை காணலை. என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்ச அவரு, ஆட்டோவுக்கு, 800 ரூபாய் குடுத்து, மனைவியை வீட்டுக்கு அழைச்சிட்டு போயிருக்காரு,''

''மறுநாள் ஜி.எச்., அவுட் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி விசாரிச்சிருக்காரு... அங்க இருந்த போலீஸ்காரர், ரேஸ்கோர்ஸ் ஸ்டேஷனுக்கு போங்கன்னு, கூலா பதில் சொல்லியிருக்காரு. அங்க போனா... பத்திரமா பைக் நின்னுட்டு இருந்துச்சு. அதைப்பார்த்ததும், 'ஓசி' வாங்கிட்டு வந்தவருக்கு மன நிம்மதி,''

''ஸ்டேஷன் போலீசார்கிட்ட விசாரிச்சப்போ, ஜி.எச்.,ல அடிக்கடி டூவீலர் திருடு போயிடுது. அதனால, சைடு லாக் போடாத வண்டிகளை துாக்கிட்டு வரச்சொல்லி, 'ஏசி' ஆர்டர் போட்டிருக்கார். இனிமே கவனமா இருங்கன்னு அட்வைஸ் பண்ணி, பைக்கை எடுத்துட்டு போகச் சொல்லி இருக்காங்க,''

''அவசரத்துக்கு நண்பர்கிட்ட பைக் ஓசி வாங்கிட்டு வந்தா, போலீஸ்காரங்க செஞ்ச வேலைனால, ஆட்டோவுக்கு, 800 ரூபா செலவாகியிருக்கு; ஒரு நாள் லீவு போட்டு ஸ்டேஷனுக்கு அலைஞ்சிருக்கு; எப்படி எல்லாம் ஜனங்கள பாடாபடுத்துறாங்கன்னு புலம்பிட்டு பைக்கை எடுத்துட்டு போயிருக்காரு,''

கமிஷன் ஆபீசர்


''கோவில் திருப்பணிக்கு வசூலிக்கிற நன்கொடையிலும் ஒரு ஆபீசர் கமிஷன் கேக்குறாராமே...''

''ஆமா... உண்மைதான்! இந்த கூத்து, இந்து சமய அறநிலையத்துறையில நடக்குது. வடக்கு பகுதியில இருக்குற பழமையான பெருமாள் கோவிலை புதுப்பிக்க, திருப்பணி கமிட்டி அமைச்சிருக்காங்க. இவுங்க, முக்கிய பிரமுகர்களை சந்திச்சு, நன்கொடை வசூலிக்கிறாங்க; இன்னும் போதுமான நிதி கெடைக்காம, அல்லாடிட்டு இருக்காங்க. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியோ, வசூலிக்கிற நன்கொடையில கமிஷன் தரணும்னு கறாரா சொல்றாராம். அதனால, திருப்பணி கமிட்டியினர் நொந்து போயிருக்காங்க,''

'ஓபன் ரிப்போர்ட்'


''கடந்த ஓராண்டு நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டு, சிட்டி போலீஸ்ல இருந்து ஓபனா ரிப்போர்ட் வெளியிட்டாங்களாமே...''

''ஆமா... வெளிப்படைத்தன்மையா செயல்படுறத காட்டுறதுக்காக... கொலை... கொள்ளை... வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடந்த நிகழ்வுகளை 'லிஸ்ட்' எடுத்திருக்காங்க. எல்லா விதமான குற்றங்களையும், போலீஸ்காரங்க குறைச்சிருக்கிறதா சொல்லியிருக்காங்க.

அதுல, மதுபோதையில வாகனம் ஓட்டிட்டு போறவங்க மட்டும், அதிகமாகி இருக்கறதா சொல்லியிருக்காங்க,''

''2022ல, 7,807 பேர் மேல கேஸ் போட்டிருக்காங்க; 2023ல, 8,610 பேர் மேல கேஸ் பைல் பண்ணியிருக்காங்க.

இது, போலீஸ்காரங்க வழக்கு பதிவு செஞ்ச விபரம் மட்டும்தான். லஞ்சம் வாங்கிட்டு ஏகப்பட்ட பேரை விட்டுருப்பாங்க. அப்படிப்பார்த்தா... நம்மூர்ல மதுபோதையில வாகனம் ஓட்டுறது ஜாஸ்தின்னு, அவுங்களே சொல்லி இருக்காங்க.

இதுக்கு, 'பொறுப்பு' அமைச்சர் என்ன பதில் சொல்லப் போறார்ன்னு தெரியலை,'' என கூறியபடி, கிச்சனுக்குள் நுழைந்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us