sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

ரிசல்ட் வந்தா கலையும் இன்டெலிஜென்ஸ் 'சவுக்கை' கண்டாலே அலறுது போலீசு!

/

ரிசல்ட் வந்தா கலையும் இன்டெலிஜென்ஸ் 'சவுக்கை' கண்டாலே அலறுது போலீசு!

ரிசல்ட் வந்தா கலையும் இன்டெலிஜென்ஸ் 'சவுக்கை' கண்டாலே அலறுது போலீசு!

ரிசல்ட் வந்தா கலையும் இன்டெலிஜென்ஸ் 'சவுக்கை' கண்டாலே அலறுது போலீசு!


ADDED : மே 21, 2024 12:53 AM

Google News

ADDED : மே 21, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகர் வலம் சென்று திரும்பிய மித்ராவுக்கு, சூடா பில்டர் காபி கொடுத்து வரவேற்ற சித்ரா, சோபாவில் உட்கார்வதற்குள், ''சவுக்கு சங்கர் விஷயத்துல போலீஸ்காரங்க ரொம்பவே பயப்படுறாங்களாமே...''

''கோர்ட்டுக்கும், கவர்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கும் அவரை அழைச்சுட்டு போறப்போ, அடிக்கடி தென்படுற போலீஸ்காரங்களை பார்த்து, 'பாஸ்... இங்க வாங்க... பாஸ்'ன்னு கையசைச்சு கூப்பிட்டு, காதோட காதா ஏதாச்சும்'கிசுகிசு'க்கிறாராம்.

அவர்கிட்ட பேசுற போலீஸ்காரங்களை, உயரதிகாரிங்க தனியா கூப்பிட்டு, 'சவுக்கு' என்ன சொன்னாருன்னு, 'என்கொயரி' பண்றாங்களாம். அதனால, சவுக்கு சங்கரோட போறதுக்கே போலீஸ்காரங்க பயப்படுறாங்களாம்,''

நடுங்கும் உளவுத்துறை


''லோக்சபா எலக்சன் முடிவு என்னாகுமோன்னு, உளவுத்துறை போலீஸ்காரங்களும் நடுக்கத்துல இருக்காங்களாமே...''

''அதுவா... ஆளுங்கட்சிக்காரங்களை பகைச்சுக்கக் கூடாதுன்னு, தி.மு.க., தான் ஜெயிக்கும்; அ.தி.மு.க.வுக்கு ரெண்டாமிடம் கிடைக்கும்; பா.ஜ., மூன்றாமிடத்துக்கு தள்ளப்படும்னு, 'ரிப்போர்ட்' அனுப்பியிருந்தாங்களாம்.

ஓட்டுப்பதிவு முடிஞ்சதுக்கு அப்புறம்... ஏகப்பட்ட பேர்கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்போ, கிடைச்ச தகவல், அவங்கள அதிர வச்சிருச்சாம். பாரம்பரிய தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவங்க கூட, 'நாங்க... மலையானவருக்கு தான் ஓட்டுப்போட்டோம்னு சொன்னதுனால, ரொம்பவே பயத்துல இருக்காங்களாம்.

உளவுத்துறை 'ரிப்போர்ட்' தப்பாகிடுச்சுன்னு... ஒட்டுமொத்த டீமையே கலைச்சு, மாவட்டம் விட்டு மாவட்டம், துாக்கியடிச்சிடுவாங்களோன்னு நினைக்கிறாங்களாம்,''

பிரியாணி விருந்து


''ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் ஒருத்தரு, தடபுடலா பிரியாணி விருந்து கொடுத்து, பிறந்த நாள் கொண்டாடுனாராமே...''

''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன். உண்மைதான்! 'மாவட்டத்துக்கு' நெருக்கமா இருக்கணும்னு, கட்சிக்காரங்க பலபேர் கேக், மாலையோட வந்து வாழ்த்து சொல்லியிருக்காங்க. சிக்கன், மட்டன் பிரியாணி விருந்து குடுத்து, 'பர்த்டே பார்ட்டி'யை தடபுடலா கொண்டாடுனாராம்.

மாவட்டம் கூட போட்டோ எடுக்கறதுக்கு, கட்சிக்காரங்க ஆசைப்பட்டு போயிருக்காங்க. அவுங்களை நெருங்க விடாம... 'எடுபிடி'கள் தடுத்து நிறுத்திட்டாங்களாம். அதனால, உடன்பிறப்புகளுக்கு வருத்தமாம்,'' என்றபடி, சமையலறைக்குள் சென்றாள் மித்ரா.

ரிசர்வ் சைட் விற்பனைக்கு


பின்தொடர்ந்து வந்த சித்ரா, ''கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள இருக்குற 'ரிசர்வ் சைட்'டுகள்ல மரக்கன்று நடச்சொல்லி, கமிஷனர் ஆர்டர் போட்டிருக்காராமே...'' என கேட்டாள்.

''அப்படி செஞ்சா... நல்லாயிருக்கும்; நம்மூரும் பசுமையாகிடும். ஆனா, பீளமேடு ஆர்.கே.மில் காலனியில, 12 கோடி ரூபா மதிப்புள்ள, 38 சென்ட் 'ரிசர்வ் சைட்'டை கூறு போட்டு, 10 பேருக்கு கிரையம் செஞ்சிருக்காங்க.

இது சம்பந்தமா, ஐகோர்ட்டுல வழக்கு நடந்தப்போ, கிரையம் செல்லாதுன்னு தீர்ப்பு கொடுத்திருக்காங்க. ஆனா, கார்ப்பரேஷன் பேருக்கு பட்டாவை மாத்தாம விட்டுட்டாங்க. அதனால, 'பவர்' மாத்திக் கொடுத்து, தில்லாலங்கடி வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காங்களாம்,''

''சென்னையை சேர்ந்த ரத்தத்தின் ரத்தங்கள், நம்மூர்ல இருக்கற, வில்லங்கமான ப்ராப்பர்ட்டிகளை தேடிப்பிடிச்சு, ஆட்டைய போடுற வேலையை செய்றாங்களாம்.

இதுக்காக, ஏகப்பட்ட ரவுடிகளை களமிறக்கி இருக்காங்களாம். சவுத் தாலுகாவுல இருக்குற ஒரு லேடி ஆபீசருக்கு பெரிய தொகை கொடுத்து, பட்டா பெயரை மாத்தி வாங்கியிருக்காங்க. அதை வச்சு, இப்போ 'பவர்' வாங்கிட்டு, ரிசர்வ் சைட்டை விக்கிறதுக்கு முயற்சி நடக்குதாம்.

''கார்ப்பரேஷனுக்கு சொந்தமான நிலத்தை, மீட்க வேண்டிய பொறுப்புல இருக்குற ஆபீசருங்க, போலீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்காமலும், தாசில்தார், ஆர்.டி.ஓ.,வுக்கு தபால் எழுதாமலும் இழுத்தடிச்சிட்டு இருக்காங்களாம்.

பட்டா பெயர் மாத்திக் கொடுத்த லேடி ஆபீசரை, இதுக்கு முன்னாடி, விஜிலென்ஸ்ல பல முறை 'வார்ன்' பண்ணிருக்காங்க. அதையும் மீறி அந்தம்மா, கல்லா கட்டுற வேலையை தைரியமா செய்றாங்க.

விஜிலென்ஸ் ஆபீசர்கதான் துாக்கத்துல இருந்து, மூனு வருஷமா எந்திரிக்காம இருக்காங்கன்னு கமென்ட் வருது,'' என்ற மித்ரா, 'நம்மூர்ல போதைப்பொருள் நடமாட்டம் ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சாமே...'' என கேட்டாள்.

போதை கலாசாரம்


வெஜிடபிள் பிரியாணி செய்வதற்காக, காய்கறி நறுக்க ஆரம்பித்த சித்ரா, ''ஆமாப்பா... நீ சொல்றது சரிதான்! குனியமுத்துார் ஸ்டேஷன் லிமிட்டுல, ஏகப்பட்ட காலேஜ் இருக்கு. பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஸ்டூடன்ஸ் நிறையப் பேர் படிக்கிறாங்க. பலரும் போதைக்கு அடிமையாகி வர்றாங்க,''

''கஞ்சா சாக்லேட், போதை மாத்திரைன்னு தினுசு தினுசா போதைப்பொருள் புழக்கம் அதிகமாயிடுச்சு. கஞ்சாவுக்கு பதிலா மெட்டாபெத்தமைன் போதைப்பொருள் புழக்கம் வந்திருக்கு. அரசுக்கு கெட்ட பேரு வரும்னு, பல சம்பவங்களை போலீஸ்காரங்க மறைக்கிறாங்களாம்,''

பாலியல் பூதம்


''வெஸ்ட் ஜோன்ல இருக்கற, கார்ப்பரேஷன் ஆபீசர் ஒருத்தரு மேல பாலியல் புகார் கிளம்பியிருக்காமே...''

''விசாகா கமிட்டிக்கு பொறுப்பு ஆபீசரு, இந்த விவகாரத்தை விசாரிச்சிருக்காங்க. இருந்தாலும், மேல்நடவடிக்கை எடுக்காம கெடப்புல போட்டிருக்காங்க. இதே மாதிரி, எலக்சன் டூட்டி பார்த்த ஒரு லேடியை, பாலியல் தொந்தரவு செஞ்சவங்க சம்பந்தமா, கலெக்டரேட் ஆபீசர் ஒருத்தரு 'என்கொயரி' செஞ்சு, கலெக்டருக்கு தகவல் சொல்லியிருக்காரு.

பாதிக்கப்பட்ட லேடி யாருன்னு, ஆபீசர்ஸ் கண்டுபிடிச்சிட்டாங்க. இருந்தாலும், ஒருத்தர் மேலயும் நடவடிக்கை எடுக்காம அமுக்கி வச்சிருக்காங்க. அரசியல் ரீதியா, யாராச்சும் பிரச்னையை கிளப்புனாதான், நடவடிக்கை எடுப்பாங்க போலிருக்கு,''

சுருட்டப்பட்ட நிதி


''அதெல்லாம் இருக்கட்டும். ஸ்கூலுக்கு ஒதுக்கற நிதியை, போலி பில் வச்சு, ஹெச்.எம்., சுருட்டுறாருன்னு, கம்ப்ளைன்ட் போயிருக்காமே...''

''அதையேன் கேக்குற... சூலுார் டவுன்ல இருக்கற ஒரு கவர்மென்ட் ஸ்கூல் ஹெச்.எம்., மேலதான் இப்படி கம்ப்ளைன்ட் போயிருக்கு. கவர்மென்ட் ஒதுக்கற நிதிக்கு, ஏதாச்சும் ஒரு பில் வச்சு, தொகையை அள்ளிடுறாராம்.

ஸ்கூலுக்கும் ஒழுக்கமா வர்றதில்லையாம்; கேட்டா, 'லீவுல' இருக்கேன்னு சொல்றாராம். கல்வித்துறை விசாரணை வளையத்துல அந்த ஹெச்.எம்., இருக்காராம்,''

சுத்துது 'ஆவி'


''இறந்து போனவரோட ஆவி சுத்துதுன்னு... கவர்மென்ட் ஸ்டாப்ஸ் பயப்படுறாங்களாமே...''

''அந்தக்கூத்து... ரொம்ப தமாசுப்பா... பிளீச்சி ஊராட்சியில இருக்குற கோட்டை பிரிவுக்கு பக்கத்துல ஒரு தண்ணீ தொட்டி இருக்கு. இந்த ஏரியாவுக்கு ஆபரேட்டரா இருந்த ஒருத்தரு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஆக்சிடென்ட்டுல இருந்துட்டாரு.

அவரோட 'ஆவி', ஏரியாவுக்குள்ள சுத்திக்கிட்டு இருக்குன்னு, அக்கம் பக்கத்துல பரபரப்பா பேசிட்டு இருக்காங்க. 'ஆவி'க்கு பயந்து, ஆபரேட்டரா வர்றதுக்கு பயப்படுறாங்களாம்,'' என்றபடி, சமையல் வேலையில், 'பிஸி'யானாள் சித்ரா.






      Dinamalar
      Follow us