sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

திணறுது, பதறுது உடன்பிறப்பு கூடாரம்: தாமரை கட்சிக்காரர் முகாமில் ஆரவாரம்!

/

திணறுது, பதறுது உடன்பிறப்பு கூடாரம்: தாமரை கட்சிக்காரர் முகாமில் ஆரவாரம்!

திணறுது, பதறுது உடன்பிறப்பு கூடாரம்: தாமரை கட்சிக்காரர் முகாமில் ஆரவாரம்!

திணறுது, பதறுது உடன்பிறப்பு கூடாரம்: தாமரை கட்சிக்காரர் முகாமில் ஆரவாரம்!


ADDED : ஏப் 09, 2024 12:40 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிமித்தமாக, நகர் வலம் செல்ல, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

கேமரா பேக்குடன் ஓடோடி வந்த மித்ரா, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

காந்திபுரம் பகுதியில், ஒரு வாகனத்தில், வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, மைக்கில் ஒருவர் பிரசாரம் செய்தவாறு கடந்து சென்றார்.

அதை கவனித்த மித்ரா, ''என்னக்கா, தேர்தல் பிரசாரம் எப்படி இருக்கு. நம்மூரில் மும்முனை போட்டி தானே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

அண்ணாமலைக்கு ஆதரவு


''தேர்தல் களம் பரபரப்பா இருக்கு. பா.ஜ.,- தி.மு.க., - அ.தி.மு.க.,ன்னு மும்முனை போட்டி தான் இருக்கு. அனைத்து தரப்பு மக்களும் கட்சியை தாண்டி, அண்ணாமலையை விரும்புறாங்க.

''இப்போ... கள நிலவரம் எப்படி இருக்கு...''

''களத்துல தி.மு.க., திணற ஆரம்பிச்சிடுச்சு. மேலிடத்துக்கு 'நெகட்டிவ் ரிப்போர்ட்' போயிருக்கு. அண்ணாமலைக்கான ஓட்டு வங்கி, கூடியிருக்குன்னு சொல்லியிருக்காங்க. இதை தெரிஞ்சுக்கிட்டு, ஜாதி அரசியலை முன்னெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க,''

டி.ஆர்.பி.போட்ட தப்புக்கணக்கு


''நம்மூர்ல இருக்கற நிர்வாகிகளை நல்லா புரிஞ்சுக்கிட்ட டி.ஆர்.பி.ராஜா, சமுதாய தலைவர்களையும், தொழில்துறை சங்க நிர்வாகிகளையும் சந்திச்சு, சமரசம் பேசிட்டு இருக்காரு. எலக்சன் முடிஞ்சதும் சி.எம்., பார்வைக்கு ஒங்க பிரச்னைய கொண்டு போயி, தீர்த்து வைக்கிறேன்னு சொல்றாரு. இருந்தாலும் தொழில்துறையை சேர்ந்தவங்க, அவரது உத்தரவாதத்தை நம்பலை...''

''அப்புறம்...மின் கட்டண பிரச்னையில சிறு குறு நடுத்தர நிறுவனத்தை சேர்ந்தவங்க ரொம்பவே கஷ்டப்படுறாங்க. கவர்மென்ட் கவனத்தை ஈர்க்க, பல முறை போராட்டம் நடத்துனாங்க. அப்போ, இவுங்களை தி.மு.க., அரசு கண்டுக்கவே இல்லை. ஓட்டு வங்கி போயிடும்னு, இப்போ கூப்பிட்டு வச்சு, சமரசம் பேசியிருக்காங்க,''

''சங்கத்துல இருக்கற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருத்தரை, சென்னைக்கு அழைச்சிட்டு போயி, முதல்வரை சந்திக்க வச்சிருக்காங்க. உடனே, அண்ணாமலை தரப்பு, அதே தொழில்துறையை சேர்ந்த மத்த நிர்வாகிகள்கிட்ட, தங்களுக்கு ஆதரவு கேட்டு பேசியிருக்காங்க,''

ஆளுங்கட்சியினர் நடிப்பு


''ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும், உண்மை கள நிலவரத்தை சொல்லாம நடிக்கிறாங்களாமே...''

''தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், அ.தி.மு.க.,வுல இருந்து வந்தவருங்கிறதுனால, கட்சி நிர்வாகிகள் பலரும் அவரை விரும்புறதில்லை. அதனால, வேலை பார்க்குற மாதிரி நடிக்கிறாங்களே தவிர, களத்துல வேலை பார்க்கலை,''

''தாமரை சின்னம் அச்சடிச்ச நோட்டீஸ், இரட்டை இலை நோட்டீஸ் வீடு வீடா போயிருக்கு. உதயசூரியன் நோட்டீஸ், பல ஏரியாக்களுக்கு இன்னும் போயி சேரலை. களத்துல இறங்கி, வீடு வீடா பிரசாரம் செய்ய உடன்பிறப்புகள் தயாரா இல்லை. வேட்பாளர் வசிக்கிற வார்டுக்குள்ளேயே, இன்னும் நோட்டீஸ் வினியோகிக்கலையாம்,''

'தில்' காட்டும் அண்ணாமலை


''அண்ணாமலை என்ன செய்றாருன்னு சொல்லவே இல்லையே,''

''அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. ஏன்னா... துணிச்சலா பேசுறாரு... எதிரணியினர் மேல இருக்கற குற்றச்சாட்டை தோலுரிச்சுக் காட்டுறாரு... தப்பை தப்புன்னு தில்லா தட்டிக் கேட்குறாரு. இப்படியொரு ஆள், நம்மூர்ல இருந்து 'செலக்ட்' ஆகணும்னு, பலரும் நினைக்கிறாங்க,''

''அப்புறம்... அவருக்கு ஆதரவா மூன்றடுக்கா வேலை செய்றாங்க. நண்பர்கள், அனுதாபிகள்னு வந்திருக்கிற பலரும், தொழில்துறையை சேர்ந்தவங்க, சமுதாய தலைவர்கள் பலரையும் சந்திச்சு பேசியிருக்காங்க.

உறவினர்களும் களத்துல இறங்கியிருக்காங்க. ஐ.பி.எஸ்., அதிகாரியா வேலை பார்த்த காலத்துல இருந்த சில ஆபீசர்ஸ், பக்கபலமா செயல்படுறாங்களாம். கட்சிக்காரங்க கீழ்மட்ட லெவல்ல வேலை பார்க்குறாங்க.

மேல்மட்டத்துல நடக்குற வேலை, கீழ்மட்டத்துல இருக்குற கட்சிக்காரங்களுக்கு தெரியறதில்லை. கட்சியில உள்ளடி வேலை பார்க்குறவங்க இருக்கறதுனால, ரொம்பவே உஷாரா காய் நகர்த்திட்டு இருக்காங்களாம்,''

''களத்துல அ.தி.மு.க., இருக்குதா...?''

''இருக்குது. வேலுமணிக்கு நாலு தொகுதி கொடுத்திருக்காங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு போயி, பிரசாரம் செய்றாரு. வேட்பாளர் ராமச்சந்திரன் அவரோட ஸ்டைல்ல பிரசாரம் பண்றாரு. 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வா இருக்கறவங்க, ஆதரவு திரட்டுற மாதிரி, 'ஆக்டிங்' மட்டும் கொடுத்திட்டு இருக்காங்க,''

இ.பி.எஸ்., பேச்சு


''நம்மூர்ல இ.பி.எஸ்., பேசுன பேச்சை கேட்டு, தி.மு.க., தரப்பு ஆடிப்போயிருச்சாமே...''

''ஆமா, மித்து! உண்மைதான்! நம்மூர்ல பா.ஜ., போட்டியிடுறதுனால, சிறுபான்மையினர் ஓட்டு லட்டு மாதிரி முழுசா தி.மு.க.,வுக்கு விழுந்திரும்னு, பகல் கனவு கண்டுக்கிட்டு இருந்தாங்க... ஆனா, இ.பி.எஸ்., பேசுறப்போ, அ.தி.மு.க., ஆட்சியில நம்மூருக்கு என்னெல்லாம் செஞ்சோம்னு, பட்டியல் போட்டு பேசுனாரு... இதை யாருமே எதிர்பார்க்கலை...''

''அப்புறம்... சிறுபான்மையின மக்களில் இஸ்லாமியருக்கு என்ன செஞ்சோம்; கிறிஸ்தவர்களுக்கு என்ன செஞ்சோம்னும், லிஸ்ட் போட்டு படிச்சாரு. ரம்ஜான் நோன்புக்கஞ்சிக்கு இலவச அரிசி கொடுக்கறதுக்கு உத்தரவு போட்டதே ஜெ.,தான்னு அடிச்சு சொன்னாரு.

இதை கேட்டு, தி.மு.க., தரப்பு பயந்துடுச்சு. மறுநாள் இஸ்லாமிய அமைப்புகளை கூப்பிட்டு பேசி, 'எங்களது ஆதரவு தி.மு.க.,வுக்கு தான்'ன்னு அறிக்கை கொடுக்க வச்சிருக்காங்க,''

வேலுமணிக்கு ஆதரவு


''ஆனா, நம்மூரை சேர்ந்த இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர், வேலுமணிக்கு ஆதரவா இருப்பாங்களே...''

''ஆமாப்பா... நீ சொல்றது உண்மைதான்! வேலுமணி மினிஸ்டரா இருந்தப்போ, கபர்ஸ்தானம் கட்டித்தரச்சொல்லி கோரிக்கை வச்சாங்க. சொந்தக்காசு செலவழிச்சு, அ.தி.மு.க., பெயர்ல நிலம் வாங்கி, அதை அரசுக்கு தானமா கொடுத்து, அந்த இடத்துல கபர்ஸ்தானம் கட்டி கொடுத்தாரு வேலுமணி.

அதே மாதிரி, இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பழ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள் பலருக்கும் வாழ்வாதாரம் கொடுத்தவரு. இதெல்லாம் தெரியாம, டி.ஆர்.பி.ராஜா அரசியல் செஞ்சுக்கிட்டு இருக்காருன்னு, ரத்தத்தின் ரத்தங்கள் பேசிட்டு இருக்காங்க,''

''இருந்தாலும், தி.மு.க.,வுக்கு கண்டிப்பா ஓட்டுப் போடுவாங்கன்னு, உறுதியா தெரியற வீட்டுக்கு, ஒரு வீட்டுக்கு, 500 ரூபாய் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எலக்சனுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி... பணம் பட்டுவாடாவை தீவிரப்படுத்த யோசிக்கிறாங்க...''

''ஆனா, ஓட்டுக்கு பணம் தர மாட்டேன்னு தில்லா அண்ணாமலை சொன்னதை, நம்மூர் மக்கள் வரவேற்குறாங்க. அதனால, ஓட்டுக்கு பணம் கொடுத்து, கவர்மென்ட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தணுமான்னு, தி.மு.க.,வுல ஒரு தரப்பு யோசிக்குது,''

கூட்டணி பலம் எங்கே


''கூட்டணி பலம்னு மேடைக்கு மேடை பேசத்தான் செய்றாங்களே தவிர, களத்துல கூட்டணி கட்சிக்காரங்களை காணலை. வேட்பாளருடன் சில பேரு தான் வர்றாங்க. காங்கிரஸ் கட்சி கொடிகளை ஒன்றிரண்டு பார்க்க முடியுது; திருமாவளவன் கொடி அதிகமா பறக்குது; ரெண்டு கம்யூ., கட்சியில, ஒரு குரூப் சுத்தமாவே காணலை. ம.தி.மு.க.,வை சேர்ந்தவங்க திருச்சிக்கு போயிட்டாங்க. பீளமேட்டுல செயல்படுற பணிமனையில, தி.மு.க., நிர்வாகிகளே அதிகமா தென்படுறாங்க,''

பா.ஜ.,வுக்கு ஆதரவு


''நீலகிரி தொகுதியிலயும் தி.மு.க.,வுக்கு, சிக்கல் வரும்னு பேசிக்கிறாங்களே...''

''நீலகிரி எல்லைக்குள்ள வர்ற அன்னுார் ஒன்றியத்துல பசூர், அல்லப்பாளையம்னு ரெண்டு ஊராட்சி இருக்கு; குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவங்க பெரும்பான்மையா இருக்காங்க. பா.ஜ., சார்புல தனி கூட்டம் நடத்தி பேசியிருக்காங்க; அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்க.

அதனால, ரெண்டு ஊராட்சியில இருக்கறவங்க ஊர் கூட்டம் நடத்தி, பா.ஜ.,வுக்கு ஆதரவுன்னு சொல்லிட்டாங்களாம்.

இந்த விஷயம் உளவுத்துறை மூலமா, தி.மு.க., தலைமைக்கு போயிருக்காம். தெனமும் சாயாங்காலம் வீடு வீடா போயி, நோட்டீஸ் கொடுக்கறதுக்கு கூட தி.மு.க., தரப்புக்கு ஆள் கிடைக்கலையாம். இதனால, அவங்க கலக்கத்துல இருக்காங்களாம்,''

நியமன விதிமீறல்


''பாரதியார் யுனிவர்சிட்டியில, 58 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துல விதிமீறல் நடந்திருக்காமே...'' என, 'ரூட்'டை மாற்றினாள் மித்ரா.

''ஆமாப்பா... அந்த சம்பவத்தை நானும் கேள்விப்பட்டேன். உண்மைதான்! ஆனா, சம்பந்தப்பட்ட அதிகாரி மேல நடவடிக்கை எடுக்காம, பல்கலை நிர்வாகம் லேட் பண்ணிட்டு இருக்கு.

இந்த பிரச்னையில இருந்து தப்பிக்கிறதுக்குரிய வேலைய, அந்த அதிகாரி செஞ்சுக்கிட்டு இருக்காராம். சம்பந்தப்பட்ட லேடி ஆபீசர் மேல, நடவடிக்கை எடுக்கணும்னு பேராசிரியர்களில் ஒரு தரப்பினர் வலியுறுத்திட்டு இருக்காங்களாம்,''

குப்பை தீ மர்மம்


''அதெல்லாம் இருக்கட்டும்... வெள்ளலுார் குப்பை கிடங்கு பத்தி எரியுதே... சதி வேலையா...''

''ஆமாப்பா... நீ சந்தேகப்படுறது சரிதான். பழைய குப்பையை அழிக்கிறதுக்கு, 'பயோமைனிங்' திட்டம் செயல்படுத்துறாங்க; இதுக்கு கவர்மென்ட்டு கோடிக்கணக்குல பணம் கொடுக்குது. ஒவ்வொரு தடவையும் பணம் ஒதுக்கும்போது, குப்பை கிடங்கு எரியுது.

இப்போ, ரெண்டாம் கட்டமா, 50 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்காங்க. தீப்பிடிச்சு எரிஞ்சதுக்கு பின்னாடி, 'பயோமைனிங்'ல பழைய குப்பையை அழிச்சிட்டோம்னு, கணக்கு எழுதுவாங்களோன்னு அந்த ஏரியாவை சேர்ந்தவங்க பேசிக்கிறாங்க,'' என்றவாறு, கலெக்டர் அலுவலகம் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.






      Dinamalar
      Follow us