sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

மக்களுக்காக அதிகாரிங்க ஏறுனாங்க மலை; 'சவுக்கு' விவகாரத்துல உருளப் போகுது தலை!

/

மக்களுக்காக அதிகாரிங்க ஏறுனாங்க மலை; 'சவுக்கு' விவகாரத்துல உருளப் போகுது தலை!

மக்களுக்காக அதிகாரிங்க ஏறுனாங்க மலை; 'சவுக்கு' விவகாரத்துல உருளப் போகுது தலை!

மக்களுக்காக அதிகாரிங்க ஏறுனாங்க மலை; 'சவுக்கு' விவகாரத்துல உருளப் போகுது தலை!


UPDATED : மே 14, 2024 03:20 AM

ADDED : மே 14, 2024 01:32 AM

Google News

UPDATED : மே 14, 2024 03:20 AM ADDED : மே 14, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிமித்தமாக, கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் பேசிக்கொண்டே, வளாகத்தை சுற்றிப்பார்த்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பிரபல 'யூ டியூபர்' சவுக்கு சங்கரை சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தனர்.

அதை கவனித்த சித்ரா, ''என்னப்பா, மித்து! சவுக்கு சங்கர் விவகாரத்தை விசாரிச்சியா; ஜெயில்ல என்ன தான் நடக்குதாம்,'' என, அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தாள்.

அஞ்சு வீடியோ ரிலீஸ்


''சவுக்கை அரெஸ்ட் பண்ணி அழைச்சிட்டு வந்தப்போ, தாராபுரம் பக்கத்துல ஆக்சிடென்ட் ஆச்சு பார்த்தீங்கள்ல... அந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்துல ரிலீசாச்சு. விபத்துல சவுக்கு சங்கர் இடது கையில காயம் ஏற்பட்டுச்சு. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில ரிப்போர்ட் ஆகியிருக்கு...''

''ஆனா... வலது கையில மாவுக்கட்டு போட்டிருக்கு; விரல்லாம் வீங்கிப் போயிருக்கு. அதனால, சிறை வளாகத்துல ஏதோ நடந்திருக்குன்னு, போலீஸ்காரங்க சொல்றாங்க...''

உருளப்போகுது தலை


''சவுக்கு மேல போட்டிருக்கிற அவதுாறு வழக்கு, தள்ளுபடி ஆகறதுக்கே வாய்ப்பு இருக்குன்னு வக்கீல்கள் தரப்புல சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம் அவசர, அவசரமா கஞ்சா கேஸ் பைல் பண்ணியிருக்காங்க.

போலீஸ்காரங்களை சமூக வலைதளத்துல பொதுஜனங்க கழுவி ஊத்துறாங்க. சவுக்கு சங்கர் விவகாரத்துல, ஆரம்பத்துல இருந்தே போலீஸ்காரங்களும், சிறைத்துறை அதிகாரிகளும் கோட்டை விட்டுட்டே இருக்காங்களாம்.கோர்ட்டுக்கு போனா ஆபீசர்ஸ் தலை உருளும்னு சொல்றாங்க,''

ஏ.டி.எம்.கே., சப்போர்ட்


''சவுக்குக்கு ஆதரவா களமிறங்குற வக்கீல்கள் எல்லோரும், ஏ.டி.எம்.கே.,காரங்களாமே...''

''ஆமாக்கா, லோக்சபா எலக்சன் சமயத்துல அ.தி.மு.க.,வுக்கு ஆதரவா சவுக்கு வீடியோ வெளியிட்டாரு. மாஜி அமைச்சர் வேலுமணி, பிரத்யேக பேட்டி ஒளிபரப்புனாரு. அதுல, நம்மூர்ல சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கிறதுக்கு, இடம் தேடுன விவகாரம்; பாரதியார் பல்கலையில ஆய்வு செஞ்சதெல்லாம், அ.தி.மு.க., ஆட்சியில நடந்தது; அந்த திட்டத்துக்கு தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டியிருக்குன்னு தோலுரிச்சுக் காட்டுனாரு... அதனால, நம்மூர்ல வச்சு அவரை 'கவனி'க்கிறங்களாம். இந்த விவகாரத்துல எந்த இடத்திலேயும் கோட்டை விட்டுறக் கூடாதுன்னு, ஏ.டி.எம்.கே., வக்கீல் அணி உஷாரா இருக்குதாம்,'' என பேசிக் கொண்டே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.

ரஸ்க் சாப்பிடுற மாதிரி


பின்இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''எனக்கெல்லாம் 'ரிஸ்க்' எடுக்கறதெல்லாம் 'ரஸ்க்' சாப்பிடுற மாதிரின்னு வடிவேலு காமெடி வர்றது மாதிரி, கார்ப்பரேஷன் கமிஷனர், நீலகிரி மலையேறி சாதிச்சுக் காட்டிட்டாராமே...'' என, கேட்டாள்.

''ஆமாக்கா... பில்லுார் டேம் வறண்டதால, நம்மூருக்கு குடிநீர் சப்ளை நின்னு போயிடுச்சு. ஒரு டீம் ரெடி பண்ணி, நீலகிரி மாவட்டத்துல இருக்குற அப்பர் பவானி, போத்திமந்து நீர்த்தேக்கத்துக்கு கார்ப்பரேஷன் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் போயிருக்காரு.

அங்க போறது அவ்ளோ ஈசியான காரியம் இல்லை; பில்லுார் டேம்ல இருந்து, 63 கி.மீ., துாரம் பயணம் செஞ்சிருக்காங்க. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத ஏரியா; வன விலங்குகள் நடமாடுற அடர்ந்த வனப்பகுதி,''

''கமிஷனரே... ஏழெட்டு தடவை வாந்தி எடுத்துட்டாராம். அவர் கூட போனவங்களும், வாந்தி எடுத்து சுருண்டுருக்காங்க. இருந்தாலும், விடாப்பிடியா... தண்ணீ இருக்குற ஏரியாவுக்கு போயே ஆகணும்னு, 'டார்கெட்' பிக்ஸ் பண்ணி போயிருக்காங்க.

அதுக்கப்புறம் எப்படி தண்ணி கொண்டு வர்றதுன்னு பிளான் பண்ணி, மின் மோட்டார் எடுத்துட்டு போயி, 'பம்ப்' பண்ணியிருக்காரு. இந்த முயற்சி 'சக்சஸ்' ஆனதும்... கலெக்டர் கிராந்திகுமார் போயிருக்காரு. அவர் சிக்னல் கொடுத்ததும், சென்னையில இருந்து உயரதிகாரிகளை அழைச்சிட்டு வந்து காட்டிருக்காங்க...''

''அடடே... நம்மூர் மக்களுக்கு குடிநீர் கொண்டு வர்றதுக்கு, ஆபீசர்ஸ் இவ்ளோ சிரமப்பட்டுட்டு இருக்காங்கங்கறது இப்பத்தான் தெரியுதப்பா...''

''அக்கா... தேர்தல் நடத்தை விதிமுறை இன்னமும் அமல்ல இருக்கறதுனால, ஆளுங்கட்சி தரப்புல யாரும் எட்டிக்கூட பார்க்காம ஒதுங்கியே இருக்காங்க. ஏரியாவுக்குள்ள கவுன்சிலர்கள் பதுங்கி இருக்காங்க. முழுப்பொறுப்பும் ஆபீசர்ஸ் பக்கம் திரும்பியிருக்கு. அதனால, ரிஸ்க் எடுத்து தண்ணி கொண்டு வந்து சேர்த்திருக்காங்க,''

அந்தக்கால சம்பவம்


''இப்போ, முதல்வர் தனிச்செயலரா இருக்கிற முருகானந்தம், நம்மூருக்கு கலெக்டராவும், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரா இருக்கற கார்த்திகேயன், கார்ப்பரேஷன் கமிஷனராவும் இருந்த சமயத்துல, சிறுவாணி டேம் வறண்டுச்சு,'' என்றாள் சித்ரா.

''அப்போ, நீர் எடுக்குற கிணத்துல நாலாவது வால்வு சேத்துக்குள்ள புதைஞ்சிருக்கு. அந்த வால்வை கண்டுபிடிச்சா, நம்மூருக்கு தண்ணீ கொண்டு வரலாம்னு கார்ப்பரேஷன் ஆபீசர் ஒருத்தரு சொல்லியிருக்காரு. ஒடனே, கப்பற்படையை சேர்ந்தவங்களை வரவழைச்சு... சிறுவாணி டேமுக்குள்ளே இறக்கி விட்டு, அந்த வால்வை கண்டுபிடிச்சாங்க...''

''அதுக்கப்புறம்... சிறுவாணி கை கொடுக்கலைன்னா... நம்மூர் மக்களுக்கு தண்ணீர் பிரச்னையை தீர்க்குறதுக்காக... பில்லுார்ல இருந்து வர்ற தண்ணீரை சிறுவாணி ஏரியாவுக்கு கொடுக்குற 'இன்டர் லிங்க்' வேலை செஞ்சாங்க. இப்போ, பில்லுார்ல தண்ணீ இல்ல; நீலகிரியில இருந்து 'பம்ப்' பண்ணி எடுத்துட்டு வர்றாங்க...''

ஆளுங்கட்சியினர் 'கப்-சிப்'


அப்போது, தி.மு.க., கொடி கட்டிய ஒரு கார், ஸ்கூட்டரை 'ஓவர்டேக்' செய்தது.

அதைக்கவனித்த மித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்க ரொம்பவே, 'கப்-சிப்'ன்னு இருக்காங்களே... என்ன நடக்குதாம்...'' என, கேட்டாள்.

''தேர்தல் செலவுக்குன்னு, 30 கோடி ரூபா வரை மேலிடத்துல இருந்து கொடுத்தாங்களாம். லோக்கல் தொழில்துறையினரும், அள்ளிக் கொடுத்தாங்களாம். வார்டு வாரியா பலருக்கும் பிரிச்சுக் கொடுத்திருக்காங்க.

நிறைய பேரு, பணத்தை செலவழிக்காம அமுக்கிட்டாங்களாம். நிர்வாகிகள், கவுன்சிலர்களை கை காட்டுறாங்களாம். கவுன்சிலர்கள், நிர்வாகிகளை கை காட்டுறாங்களாம். கொடுத்த பணத்தை செலவழிக்கலைங்கிறதை மட்டும், உளவுத்துறை மூலம் 'கன்பார்ம்' பண்ணிட்டாங்க. எலக்சன் ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம்... களையெடுப்பு நடவடிக்கை இருக்கும்னு ஆளுங்கட்சி தரப்புல பேசிக்கிறாங்க...''

ரிசல்ட்டுல சந்தேகம்


''ரிசல்ட்டுனனு சொன்னதும்... எனக்கொரு சந்தேகம் வருது. பிளஸ் 2 ரிசல்ட்டுல நம்மூர் 'டாப்' ரேங்க் வருது; பத்தாங்கிளாஸ் ரிசல்ட்டுல மட்டும் பின்தங்கிடுதே... என்ன காரணம்னு விசாரிச்சியா...''

''அதே சந்தேகம்... ஆபீசர்ஸ் லெவல்லயும் வந்திருக்கு. 'என்கொயரி' பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. டீச்சர்ஸ் போஸ்டிங் எவ்ளோ இருக்கு; எவ்ளோ ஸ்டூடண்ட்ஸ் படிக்கிறாங்க, பெயிலாகுற அளவுக்கு கோச்சிங் மோசமா இருக்கறதுக்கு என்ன காரணம்னு, துளைச்செடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த தடவை, கல்வியாண்டு துவக்கத்துல இருந்தே, 'பெண்டு' நிமித்தப் போறதா... ஆபீசர்ஸ் சொல்றாங்க...''

மர்ம தேசம்


''கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டுல நடந்த சம்பவத்தை பத்தி போன வாரம் பேசுனோமே... ஏதாச்சும் ஆக் ஷன் எடுத்துருக்காங்களா...''

''என்னப்பா... இப்படி கேட்டுட்டே... இது சம்பந்தமா, ஹவுசிங் போர்டு ஆபீசர்கிட்ட கலெக்டர் விளக்கம் கேட்டிருக்காரு. ஆபீசர்ஸ் டீம், ஒவ்வொரு வீடா ஆய்வு செய்றாங்க. 'மர்ம தேசம்' மாதிரி, ஒவ்வொரு பிரச்னையா வெளியே வருதாம்.

கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு யாராச்சும் போயி, ஹவுசிங் யூனிட்டுல இருந்து வர்றோம்னு சொன்னாலே பயப்படுறாங்க. அந்தளவுக்கு பிரச்னைக்கு மேல பிரச்னை வந்துட்டே இருக்குதாம்....''

''கொஞ்ச நாளைக்கு முன்னாடி... குன்னுாரை சேர்ந்த ஒரு இளைஞர், மாடியில இருந்து கீழே விழுந்து, இடுப்பு ஒடிஞ்சு உயிரிழந்துட்டாரு. என்கொயரியில... அந்த வீடு உள்வாடகைக்கு விட்டதுன்னு தெரிஞ்சிருக்கு... இதே மாதிரி, ஏகப்பட்ட வீடு உள்வாடகையில இருக்குதாம்.

டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட்டுல வேலை பார்க்குற ஒரு லேடி ஆபீசருக்கு, சொந்த வீடு இருக்குதாம்; இருந்தாலும், ஒரு வீடு 'அலாட்மென்ட்' வாங்கி இருக்காங்களாம்; அந்த வீட்டுக்கு யார் வர்றாங்க; போறாங்கன்னு கண்காணிச்சிட்டு இருக்காங்க,''

ஆபீசர்ஸ் அமைதி


''உள்வாடகைக்குன்னு சொன்னதும், ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. தொண்டாமுத்துார், பூலுவபட்டியில இருக்கற கவர்மென்ட் வணிக வளாக கடைகளை ஏலம் எடுத்தவங்க, உள்வாடகைக்கு விட்டிருக்காங்களாம். அவுங்களுக்கு அரசியல் பின்புலம் இருக்கறதுனால, ஆபீசர்ஸ் அமைதியா இருக்காங்களாம்,''

டேபிளில் எதிரே அமர்ந்திருந்த போலீஸ்காரரின் மைக் அலறியது.






      Dinamalar
      Follow us