
டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் 'டப்' கொடுக்கும் விதமாக, கோவையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தொழில், வர்த்தகம், கண்காட்சி என ஆண்டு தோறும் பல நிகழ்ச்சிகள் களைகட்டி வருவதே இதற்கு சாட்சி. அந்த வகையில் மும்பை, சென்னையை அடுத்து கோவையிலும், பெட் கார்னிவல் நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கத் துவங்கியுள்ளன.
வரும் 18ம் தேதி 'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்', சார்பில் டாக் ேஷா மூன்றாம் ஆண்டாக, அவினாசி ரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. நம் இல்லத்தில் நம்மில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கும், ஆத்மார்த்த உறவுச் செல்லப் பிராணிகளுக்கான விழா இது. எல்லா பிரீட் பப்பீஸ், டாக்ஸ் பங்கேற்கலாம். ஸ்டைலாக, வித்தியாசமான ஆக்டிவிட்டிகளுடன், பார்வையாளர்களின் மனதை கவரும் 'டாக்'கிற்கு விருதுகள் காத்திருக்கின்றன.
ேஷா தொடர்பான கூடுதல் தகவலுக்கு, WWW.DOGSNSHOWS.COM என்ற இணையதளம் அல்லது 98430 79767/ 95852 66566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். உங்க வீட்டு செல்லக்குட்டியோட, ஷோக்கு என்ட்ரீ கொடுத்து கலக்குங்க!

