ADDED : மே 25, 2024 08:44 AM

நான் சமீபத்தில், பூனை வாங்கி வளர்த்து வருகிறேன். இதன் பராமரிப்பு முறைகள் என்ன?- எஸ். ஹரிமித்ரன், கோவை.
பூனைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் இது, மிகவும் சென்சிட்டிவ்வானது. சமைத்து நீண்ட நேரம் ஆன, பழைய உணவுகளோ, இதுவரை சாப்பிடாத புதிய வகை உணவுகளோ கொடுத்தால், செரிமான பிரச்னையால் அவதிப்படும். இதற்கு, புரோட்டீன் நிறைந்த இறைச்சி உணவுகள், பிரஷ் புட்ஸ் தான் சிறந்தது.
பொதுவாக பூனை, தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும். இரு வாரங்களுக்கு ஒருமுறை குளிக்க வைத்தால் போதும். பிறந்து மூன்று மாதங்களுக்குள், டாய்லெட் ட்ரைனிங் கொடுத்துவிட்டால், பெரிய தொந்தரவு இருக்காது. இதன் நகங்களை அடிக்கடி வெட்டி விட்டு, காதுகளை சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைப்படி, குடல்புழு நீக்கம், தடுப்பூசிகள் போடுவது அவசியம்.
பூனைக்கு அடிபட்டால், தன் எச்சிலால் அவ்விடத்தை சுத்தம் செய்து கொள்ளும். நீண்ட நேரம் ரத்தம் வெளியேறி கொண்டே இருந்தால், மருத்துவரை அணுகுவதே சிறந்தது. மற்ற விலங்குகளுக்கான 'ஆய்ன்ட்மென்ட்'களை, இதற்கு பயன்படுத்தினால், அதை நாக்கால் நக்கி, ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
- டாக்டர் எம்.மனு,கால்நடை மருத்துவர், கோவை.

