ADDED : பிப் 03, 2024 09:05 AM

புஸூ, புஸூ ரோமம், கியூட்டான கண்கள், பஞ்சுபோன்ற பிஞ்சு கால்களுடன் கொஞ்சி விளையாடும் பூனைக்குட்டியை வளர்க்க விரும்புவோருக்கு 'ஹேப்பி பார்ம்ஸ்' நிறுவனர் ரமேஷ்சின் டிப்ஸ் இதோ: பூனை உள்ளிட்ட எந்த செல்லபிராணியாக இருந்தாலும், 'கென்னல் கிளப் ஆப் இந்தியா' அங்கீகாரம் பெற்ற, 'பெட் கிளப்'களில் வாங்குவதே சிறந்தது. செல்லபிராணியின், மூன்று தலைமுறை விபரங்களுடன் சான்றிதழ் கிடைக்கிறது.
பெட் விபரங்கள் அடங்கிய 'சிப்' வழங்குகின்றனர். அவற்றின் பேரன்ட்ஸ், ஏஜ், போட வேண்டிய தடுப்பூசி விவரங்களும் இருக்கும். பிரீடர்களிடம் வாங்கினாலும், செல்லபிராணியின் பெற்றோர் விபரங்கள் அறியலாம்.
இடைத்தரகர்களை நம்பி வாங்க கூடாது. ஒரிஜினல் பிரீட் தான் தருகிறார்களா என்பதற்கு உத்திரவாதம் இருக்காது. கேட் பொறுத்தவரை பிறந்து இருமாதங்களுக்கு பின் வாங்கலாம். ஓனரிடம் நெருக்கமாகும்.
பெட் வாங்கும் போது எவ்வகையான பிரீட், பேரன்ஸ், ஏஜ், எத்தனையாவது தலைமுறை, சர்ட்டிபிகேட் உள்ளதா என, பார்த்து வாங்க வேண்டும். அதன் பராமரிப்பு முறைகள் குறித்து தெரிந்து கொண்டு வாங்குவதே சிறந்தது.

