ADDED : ஏப் 06, 2024 08:41 AM

'குட்டீஸ் அடம் பிடிச்சாங்கன்னு பப்பி வாங்கிட்டு வந்தாச்சு. ஆனா எப்படி அதுக்கு, 'ஒன் அண்டு டூ' பழக்குறதுன்னே தெரியலை. வீட்டையே நாறடிச்சுடுதுங்கறது' தான் அம்மணிகளின் கம்ப்ளைன்ட்டாக உள்ளது. இனி அந்த டென்ஷனே வேண்டாம் என்கிறார், கோவை, 'லவ்வி பெட் ஷாப்' ஓனர் ராஜ்குமார்.
பெட்ஸ் விளையாட மார்கெட்டுக்கு வந்துள்ள புதுவரவு பற்றி அவர்...ஸ்கூப்பர்: இதோட கைப்பிடிய பிரஸ் பண்ணா அடியில ஓபன் ஆகும். இது இருந்தா, டாய்லெட் அள்ளுறதுக்கு கஷ்டப்பட வேண்டாம். மவுத் ப்ரஷ்னர்: பப்பிகளுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறையாவது பிரஷ் பண்ணிவிடனும். இல்லாட்டி துர்நாற்றம் வீசும். பல் துலக்கிவிட தெரியாதவங்களுக்காகவே மவுத் ப்ரஷ்னர் கிடைக்குது. இது ஸ்பிரே, 'ட்ரீட்' மாதிரி, கடைகள்ல வச்சிருக்கோம்.
டாய்லெட் டிரைனிங் ஸ்பிரே: பப்பிகளுக்கு மூணு மாசம் வரைக்கும், டாய்லெட் டிரைனிங் பண்ணிட்டா கண்ட இடத்துல, 'ஒன் அண்டு டூ ' போகாது. இதுக்கு, பிரத்யேக மேட் டிரைனிங் ஸ்பிரே இருக்கு. குறிப்பிட்ட இடத்துல இந்த ஸ்பிரே அடிச்சிவிட்டா, அங்க மட்டும் தான் டாய்லெட் போகும்.
வாட்டர் பாட்டில்: வெயில் காலத்திற்கு ஏற்ற வகையில் தண்ணீர் சொட்டு சொட்டா வடியிற மாதிரியும், மூடியிலயே பவுல் மாதிரி வளைந்து, தண்ணீர் இருக்கற மாடல்லயும் வாட்டர் பாட்டில் கிடைக்குது. உங்க பெட்டோட வெளியிடங்களுக்கு போகும் போது மறக்காம எடுத்துட்டு போலாம், என்றார்.

