வீட்ல இதெல்லாமா வளர்ப்பாங்க...!: படிச்சா அசந்துருவீங்க
வீட்ல இதெல்லாமா வளர்ப்பாங்க...!: படிச்சா அசந்துருவீங்க
ADDED : ஜூன் 08, 2024 09:19 AM

எக்ஸாடிக் ப்ரீட்ஸ்காகவே, கோவை, சிங்காநல்லுார்ல, ஒரு பெட் ஷாப் இருக்கறதா கேள்விப்பட்டோம். அட்ரஸ் விசாரிச்சு, நாங்க போய் சேர்ந்த இடம், 'மிஸ்டர் அண்டு மிசஸ் எக்ஸாடிக்ஸ் பெட் ஷாப்'. இதன் ஓனர் நிவேதா, நம்மிடம் பகிர்ந்தவை:
முள்ளெலி
உடம்பு முழுக்க ஷார்ப்பான முட்களை கொண்ட, ஹெட்ஜ்ஹாக் (முள்ளெலி) வளர்க்க பலரும் ஆர்வம் காட்டுறாங்க. இதை கூண்டுக்குள்ள வச்சியும் வளர்க்கலாம். குட்டியா இருக்கும் போதே, கையில எடுத்து பழக்கப்படுத்திடணும். இது, ரொம்ப சென்சிட்டிவ். யாராவது தொட வந்தாகூட, தலையை உடம்புக்குள்ள மூடி, பால் மாதிரி மாறிடும். ஆனா, ஓனரோட அட்டாச் ஆகிட்டா, ஜாலியா விளையாடும்.
தேவையில்லாம சத்தம் போடாது. பராமரிக்க பெருசா மெனக்கெட வேண்டியதில்லை. மாசத்துக்கு ரெண்டுமுறை குளிக்க வைச்சா போதும். இதோட கூண்டுக்குள்ள, மரத்துாள், நெல் உமியை கொட்டி பரப்பி விட்டா, டைனிங், டாய்லெட் ஏரியாவை, அதுவே பிரிச்சிக்கும். குறிப்பிட்ட இடத்துல தான் துாங்கும். வேகவைச்ச சிக்கன், முட்டை, மீன் விரும்பி சாப்பிடும். பகல் முழுக்க, சோர்வா இருக்கும். நைட்ல தான், துறுதுறுன்னு சுத்தும். இது, எக்ஸாடிக் வெரைட்டிங்கறதால, செல்லப்பிராணியா வளக்குறதுக்கு, மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்துல, (www.parivesh.nic.in)அனுமதி வாங்கணும்.
வெள்ளெலி
வீட்டுல குட்டீஸ் இருந்தா, ஹாம்ஸ்டர் (வெள்ளெலி) குஷியாகிடும். துறுதுறுன்னு விளையாட்டிட்டே இருக்கும். இதையும் கூண்டுக்குள்ள வச்சி வளர்க்கலாம். கையில எடுத்து பழக்கப்படுத்திட்டா, ஓனரோட நல்லா விளையாடும். ரெண்டு வருஷம் தான் உயிர் வாழும். ஆனா, 13-15 குட்டி வரை போடும். வேக வைச்ச இறைச்சின்னா, விரும்பி சாப்பிட்டுக்கும். சாப்பாடு வச்சதும், எடுத்து போய், கூண்டுக்குள்ள ஒளிச்சிவச்சிக்கும். எப்போ பசிக்குதோ அப்போ தான் சாப்பிடும். இதோட கூண்டுலயும், மரத்துாள், நெல் உமியை கொட்டி பரப்பி, படுக்கைய ரெடி பண்ணணும்.
வீட்டுக்குள்ள வளர்க்கும் போது, நேரடியா சூரிய வெளிச்சம் படுற இடத்துல, கூண்டை வைக்க கூடாது. அதிக சத்தம் வர்ற இடத்துல இருந்தாலும், ரொம்ப பயந்து, ஸ்ட்ரெஸ் ஆகிடும். இது தன்னையே சுத்தம் செய்துக்கும். குளிக்க வைக்கணும்னு அவசியமில்ல. இதோட காது, மூக்குல தண்ணீர் போயிட்டா, இறந்து போகவும் வாய்ப்பு இருக்கு. இதனால, புதுசா வளர்க்குறவங்க, குளிக்க வச்சிட்டு, பின்னாடி அவஸ்தைப்படாதீங்க. கமர்ஷியல் புட் வைக்கும் போது, கண்டிப்பா தண்ணீர் குடிக்க வைக்கணும். இது ஒரு ஜோடியே 800 ரூபாய் தான்.

