
உ ங்களோடு ஊர் சுற்ற கிளம்பும் பப்பியின் மீதும் நறுமணம் கமழ, வீட்டிலேயே அதற்கு 'பர்ப்யூம்' தயாரிக்கலாம்.
இதற்கு, கிளிசரின், எலுமிச்சை பழம் ஒன்று, ஆப்பிள் சைடர் வினிகர், சிறிதளவு புதினா இலைகள் எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், ஏற்கனவே காய்ச்சி வடிகட்டிய நீர் ஒரு கப் எடுத்து கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில், நறுக்கிய எலுமிச்சை பழம் மற்றும் புதினா சேர்க்கவும். இவை நன்கு கொதித்த பின், வடிகட்டி விடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் கிளிசரின் சேர்க்கவும். பின் இக்கலவை குளிர்ச்சியடைந்ததும், ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம். இதில், எலுமிச்சைக்கு பதிலாக, ஆரஞ்ச், லாவண்டர் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவையும் சேர்க்கலாம்.
இவை அனைத்தும் பப்பிக்கு தோல் அலர்ஜி ஏற்படுத்தாத பொருட்கள். நமக்கான வாசனை திரவியங்களில் குறிப்பிட்ட விகிதம் ஆல்கஹால் கலக்கப்பட்டிருக்கும். இதில் எக்காரணம் கொண்டும், பப்பிக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை சேர்க்க கூடாது.
இனி பக்கத்துக்கு வீட்டு ஜிம்மி கிட்ட இருந்து, உங்க பப்பி காப்பாத்துறது உங்க பொறுப்புங்கோ!