sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

கெஞ்சும் உயிர்கள்...! கொஞ்சம் கருணை...!

/

கெஞ்சும் உயிர்கள்...! கொஞ்சம் கருணை...!

கெஞ்சும் உயிர்கள்...! கொஞ்சம் கருணை...!

கெஞ்சும் உயிர்கள்...! கொஞ்சம் கருணை...!


ADDED : ஏப் 20, 2024 10:47 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 10:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'எப்போதும் பரபரப்பா இருக்குற கோவை காளப்பட்டி ரோட்டுல ஒரு தெருநாய் அடிபட்டு, 10 மணி நேரத்துக்கு மேலயும் யாரும் கவனிக்கல. எங்களுக்கு தகவல் தெரிஞ்சதும் உடனே ஓடினோம். அடிபட்டு ரொம்ப நேரம் ஆகிட்டதால ஒரு கால் செயலிழந்துடுச்சு. இப்போ, 'மூணு கால் முருகன்'ங்கற நிக் நேமோட, எங்க வீட்டில ஒருத்தனாகிட்டான்...' என்கிறார், 'யாமி பவுண்டேஷன்' தலைவரும் விலங்குகள் நல ஆர்வலருமான பிருந்தா.

தெருநாய் மீட்பில் ஈடுபட்டது எப்படி?

ஆரம்பத்துல எனக்கு நாய்களை கண்டாலே பயம். திருச்சி ரோட்டுல ஒரு நாய் அடிபட்டு வலியால துடிச்சிக்கிட்டு இருந்துச்சு. மத்தவங்க மாதிரி நானும் கண்டுக்காம கடந்து போயிட்டேன். ஆனா, வலியால அது துடிச்ச சத்தம் மட்டும் காதுல கேட்டுட்டே இருந்துச்சு. யாராவது காப்பாத்தி இருப்பாங்களாங்கற கேள்வியோட திரும்பவும் அங்க போனேன்.

வலி அதிகமாகி, கத்தி துடிச்சிக்கிட்டு இருந்துச்சு. ஒரு அம்மாவா அதுக்கு மேல என்னால வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியலை. உடனே கையில எடுத்துட்டு பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டல் போனேன். ஒரு வாரத்துக்கு, அடிபட்ட கால்ல மருந்து போடணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. புண் ஆறுனதும், அதோட இடத்துலயே போய் விட்டுட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கும் மேல இருக்கும்.

எங்கேயாவது தெருநாய் அடிபட்டா, ட்ரீட்மென்ட் கொடுத்து அதோட இடத்துல விடுறது, இப்பவும் தொடருது. என்னை மாதிரியே, தெருநாய்கள் மேலயும் கரிசனம் காட்டுறவங்க கைக்கோர்த்தாங்க. இப்படித்தான், 'யாமி பவுண்டேஷன்' உருவாச்சு. இதோட உறுப்பினர்கள், 400 பேர் இருக்காங்க. இவங்களோட ஆதரவுல மட்டும் தான், அடிபட்ட தெருநாய்களை மீட்டு, ட்ரீட்மென்ட் கொடுக்குறதை, முழுநேர வேலையா மாத்திகிட்டோம்.

தினமும் உங்க உதவி கோரப் படுகிறதா?

ஆமாங்க. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 15க்கும் மேல போன் கால் வருது. அடிபட்டு கிடக்குது, ரொம்ப நாள் புண்ணாகி புழு வச்சிருக்கு எல்லாரையும் கடிக்குது, ஸ்கின் பிராப்ளம்னு நிறைய கம்ப்ளைன்ட் வருது. தெருநாய்களை மீட்டு, ஹாஸ்பிட்டல் போறதுக்குன்னு ஒரு வண்டி வச்சிருக்கோம். டிரைவரோட சேர்த்து 5 பேர் ஷிப்ட் முறையில ஒர்க் பண்றாங்க.

சில நாய்களுக்கு தொடர்ந்து ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டியிருக்கும்... தெருவுல திரும்பவும் விட முடியாத நிலைமையில இருக்கும் நாய்களுக்காக, தனியா ஒரு வாடகை வீடு எடுத்துருக்கோம். இவங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது, மருந்து போடுறதுன்னு, மொத்தம் 10 பேர் வேலை பாக்குறாங்க. இவங்களுக்கு சம்பளம், வண்டிக்கு டீசல் செலவுன்னு மாசம், 3.5 லட்சம் ரூபாய் செலவாகுது. பட்ஜெட் போட்டு, செலவு பாக்க ஆரம்பிச்சா, தெருநாய்கள யார்தாங்க காப்பாத்துறது.

மக்களோட ரெஸ்பான்ஸ் எப்படி?

பொது இடங்கள்ள மீட்கும் போது, யார்கிட்டயும் பணம் வாங்குறதில்ல. ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் அதே தெருவுல விட்டா, சண்டைக்கு வர்றவங்க தான் அதிகம். ஒரு ஜீவனை அதோட இடத்துல இருந்து பிரிக்க கூடாதுன்னு சொன்னாலும், சில பேர் புரிஞ்சிக்கறதில்ல. தெருநாய்களோட அதிகபட்ச தேவையே மூணு வேலை சாப்பாடும், கொஞ்சம் கருணையும் தான். மனுசங்க மாதிரி மத்த உயிர்களும் இந்த உலகத்துல வாழுறதுக்கு உரிமை இருக்கறதையே பலரும் உணர்வதில்லை.

உங்களோட எதிர்பார்ப்பு?

எந்த ஆதரவும் இல்லாம, வலியால துடிக்கிற ஜீவன்களை மீட்குற பணியில இன்னும் தீவிரமா ஈடுபடணும். தெருவுல விட முடியாத நாய்களுக்கு, ஒரு காப்பகம் அமைக்கணும். இதை தவிர, பெரிய எதிர்பார்ப்போ, லட்சியமோ எதுவுமில்லீங்க, என்றார். தொடர்புக்கு yaamiefoundation@gmail.com






      Dinamalar
      Follow us