ADDED : மே 18, 2024 09:38 AM

''குட்டி வீட்டுலயும் ஒரு பெட் வளர்க்கணும்னா, பெஸ்ட் சாய்ஸா இருக்கறது பிஷ் தான். புதுப்புது கஸ்டமர்ஸ், வெரைட்டியான பிஷ் கலெக்ஷன்ஸ் கேட்டு வர்றாங்க,'' என கூறி, யுனிக்கான சில பிஷ் அயிட்டங்களை நம்மோடு பகிர்ந்தார், கோவை, அக்குவா பெட்ஸ் உரிமையாளர் மனோஜ்...டிஸ்கஸ் அமேசான் நதி தான் இதோட பிறப்பிடம்.
டேங்குல வளர்க்குறதுக்கு ஏத்தமாதிரி, இதோட பயாலஜிக்கல் சிஸ்டத்தை மாத்தி இருக்காங்க. வட்ட வடிவமான உடம்பு, கிளிட்டர் மாதிரி மின்னுற ஸ்கின் இருக்கறதால பிஷ் லவ்வர்ஸோட பேவரட் லிஸ்ட்டுல, இது இருக்கு. ரொம்ப சென்சிட்டிவ்வான பிஷ். டேங்குல, சுத்தமான தண்ணில தான் இருக்கும். ப்ளூ, பிங்க், ரெட்னு நிறைய கலர்ஸ்ல கிடைக்குது. இதுல, டபுள் கலர் பிஷ் காஸ்ட்லி.
ஒரு ஜோடி சின்ன பிஷ் விலை கிட்டத்தட்ட 2,500 ரூபாய்.டெட்ரா வெரைட்டி டெட்ரால, 20க்கும் மேல வெரைட்டி இருக்கு. இது கூட்டமா தான் நீந்தும். ஒரு டஜன் டெட்ரா வெரைட்டி வாங்கி டேங்குல விட்டுட்டா, பார்க்கவே கலர்புல்லா இருக்கும். கேன் வாட்டர், ஆர்.ஓ., வாட்டர் தான், இதோட ஸ்கின்னுக்கு நல்லது. இதுலயும், 'லேம்ப் ஐ பிஷ்'ஷோட கண்ணு, லைட் ப்ளூ கலர்ல, பார்க்கவே அழகா இருக்கும். பொதுவா, இந்த வெரைட்டி, 3 வருஷம் வரைக்கும், உயிர் வாழும். ரொம்ப ஆக்டிவ்வான பிஷ்ங்கறதால, இதை கொஞ்ச நேரம் பார்த்தா, நம்ம கண்ணுக்கு நல்லது.
ஜப்பானிய கொய்கார்ப்
இது அதிகபட்சமா, 2 அடிக்கும் மேல வளரும். சின்னதா இருக்கும் போது, தொட்டியில வளர்க்கலாம். ஆனா பெருசா வளர்ந்துட்டா, சின்ன 'பாண்ட்'ல தான் விடணும். ரொம்ப பிரெண்ட்லிங்கறதால, நிறைய பேர் தேடி வாங்குறாங்க. தொட்டியில நீந்திட்டு இருக்கும் போது, தண்ணிக்குள்ள கைய விட்டு புட் கொடுத்தா, அதுவே தேடி வந்து சாப்பிடும். சாதாரண தண்ணீல கூட இது வளர்ந்துடும். இதை பராமரிக்கறது ரொம்ப ஈஸி. ஜப்பானியர்கள் இதை வாஸ்துக்காகவும் வளர்க்குறாங்க.

