ADDED : மே 25, 2024 08:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சுட்டிப்பொண்ணா, எப்பவும் துறுதுறுன்னு சுத்திக்கிட்டு, வீட்டைக்குள்ளேயே இருப்பா, என்னோட நாலா,'' என்கிறார் கோவை துடியலுாரை சேர்ந்த பிரசன்னா. ''நான் சின்ன வயசுல இருந்தே நிறைய பெட்ஸ் வளத்துருக்கேன். ஆனா, 'நாலா'கிட்ட இருக்கற துறுதுறுங்கற ஆக்டிவிட்டிய, நாட்டுப்பூனைங்க கிட்ட கூட பார்த்ததில்ல.
இது, பெர்ஷியன் ட்ரடிஷனல் லாங் ஹேர் ப்ரீட். இப்போ மூன்றரை மாசம் தான் ஆகுது. என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கும். ரொம்ப இன்டெலிஜென்ட். ஆபிஷ்ல இருந்து வீட்டுக்கு வந்தா, ஓடி வந்து, குதிச்சி விளையாடும். எப்பவும் என்கூட தான் துாங்கும். இவ காட்டுற அன்பு வேற லெவல். அதை சொன்னா புரியாது...பீல் பண்ணாதான் தெரியும்,'' என பரவசத்தோடு பகிர்ந்தார் பிரசன்னா.

