ADDED : ஜூன் 15, 2024 08:20 AM

அரிய வகை நாயினமான, 'சோவ் சோவ்'--வை, விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அனுப்பங்குளத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரபு வளர்த்து வருகிறார். இதனுடனான பந்தம் குறித்து, நம்மிடம் கூறியதாவது: 'சோவ் சோவ்' ப்ரீட், மற்ற இனங்களை விட சற்று வித்தியாசமானது. இதன் முகம், நிறம், சிங்கம் போல இருப்பதால், இவனுக்கு அந்த பெயரையே வைத்து விட்டோம்.
சீனாவில் இதை ராணுவத்திற்கு பயன்படுத்துகின்றனர். அந்நாட்டில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட, பிறந்து 56 நாட்களே ஆன, இப்பப்பியை நாங்கள் வாங்கிய போது, அதன் எடை எட்டரை கிலோவாக இருந்தது. இது ஹன்ட்டிங் ப்ரீட் என்பதால், நிறைய பேர் வளர்ப்பதில்லை. தற்போது இதற்கு 6 வயதாகிறது. எளிதில் புதிய ஆட்களிடம் பழகாது.
ஆனால், பப்பியாக இருக்கும் போதே பராமரித்தால் ஓனரிடம் மிகவும் நெருக்கமாகிவிடும். 'சிங்கத்திற்கு' என் மீது பாசம் அதிகம். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமிருந்தாலும், நான்தான் வாக்கிங் அழைத்து செல்வேன். சாப்பாடு ஊட்டிவிட வேண்டுமென அடம் பிடிக்கும். இவனை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாத அளவுக்கு நெருக்கமாகிவிட்டான், என்றார் பிரபு.

