PUBLISHED ON : ஆக 03, 2025

திகிலாக துவங்கி அறிவியலாக உருமாறும் குடும்ப கதை!
'கார்த்திக் - அனு' வீட்டில் டிவி, மின்விசிறி, தண்ணீர் குழாய் எல்லாம் தானாகவே இயங்குகின்றன; வீட்டின் உள்சுவரில் ஓவியமும் வரையப்படுகிறது. நகல் எடுத்தது போல் 'ரமேஷ் - விஜி' வீட்டிலும் இதே விசித்திரங்கள். இதன் மர்ம தொடர்பை விளக்கி, 'யாருய்யா இந்த இயக்குனர்' என கேட்க வைக்கிறது க்ளைமாக்ஸ்!
'டெசராக்ட், வடிவியல், கருத்துரு' என கேட்கும்போதே அச்சமூட்டும் பின்னணியில் கதைக்களம். ஆனால், மாயாஜால கதையாகவும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருக்கிறது திரைக்கதை. தானாகவே இயங்கும் டிவி, மின்விசிறி என வழக்கமான திகில் பாதையில் கதை நகர் கையில், 'வசமா மாட்டிக்கிட்டோம்' என்ற எண்ணமே எழுகிறது!
இரண்டாம் பாதியில், அறிவியல் பாதையில் சென்ற பிறகும்கூட நோக்கமின்றி நீள் கிறது கதை. ரமேஷை நேரில் காண கார்த்தி எடுக்கும் முயற்சிக்குப் பிறகே 'இ க்கதை எதைப் பற்றியது' என்கிற கேள்விக்கு விடை கிடைக் கிறது. விசித்திரமான தொடர்பால் இருவீட்டிலும் நிகழும் களேபரங் கள் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றன!
இறுதியில் காளி வெங்கட் - வினோதினியின் நடிப்பு, அது வரையிலான கதை மீதான உணர்வையே புரட்டிப் போடு கிறது; இதற்கு சிறுவன் கென்ட் ரிக்கின் மழலையும் ஒரு காரணம்! இத்தகைய அர்த்தமுள்ள தாக்கமின்றி இருக்கிறது கார்த்திக் - அனுவாக வரும் தர்ஷன் - ஆர்ஷா சாந்தினி பைஜுவின் பங்களிப்பு!
படம் முடிந்து இருக்கையில் இருந்து எழுகையில், 'வசமா மாட்டிக்கிட்டோம்' என்ற எண்ணம் இல்லை!
ஆக...
இயக்குனர் ராஜவேலிடம் ஒரே கேள்வி... உங்களின் அடுத்த படம் என்ன?

