
தென்காசி யு.எஸ்.பி., பெண்கள் கல்லுாரியின் இம்மாணவியருக்கு நடிகர்... நடிகர் மட்டுமே; அரசியல்வாதி... அரசியல்வாதி மட்டுமே; இருவரும் 'தலைவர்' அல்ல!
'கொடியின் கடைசி இலை உதிர்கையில் நானும் உதிர் வேன்' என படுக்கையில் கிடக்கும் பெண்ணின் உயிரை, சுவரில் தான் வரையும் அந்த இலை மூலம் தக்க வைப்பதாக, ஓ.ெஹன்றியின் 'தி லாஸ்ட் லீப்' அமெரிக்க சிறுகதை சொல்லும். அக்கற்பனை ஓவியர் பெர்மேன்... என் வாழ்நாள் நம்பிக்கை!'
- அ.பாயிஸா பைஸியா , பி.எஸ்சி., வேதியியல்
'நியூயார்க் தடகள வீராங்கனை அலிசியா மான்டனோ, 2014ல் 800 மீட்டர் துாரம் ஓடுகையில் ஐந்து மாத கர்ப்பம்; அதே துாரம் 2017ல் ஓடுகை யில் எட்டு மாத கர்ப்பம்; இரண்டிலும் கடைசி இடம் என்றாலும், 'நான் பெண்களின் பிரதிநிதியாக ஓடினேன்' என்று சொல்லி எனக்கு 'வழிகாட்டி'யாகி இருக்கிறார்!'
- அ.ரில்வானா, பி.எஸ்சி., வேதியியல்
'கொள்ளையர்கள் தாக்குதலில் 2011ல் இடதுகால் இழந்த இந்திய கைப்பந்து வீராங்கனை அருணிமா சின்ஹா, மே 2013ல் செயற்கை காலுடன் 'எவரெஸ்ட்' ஏறினார். கிளிமஞ்சாரோ, எல்ப்ரஸ், கொஸ்சி யஸ்கோ உயரங்கள் தொட்டு 2015ல் 'பத்ம ஸ்ரீ' பெற்றார். 'என்னை பின்பற்று' எனச்சொல்ல தகுதி பெற்றவர் அவர்!'
- அ.பிஸ்ருல் ஹிமாயா, பி.எஸ்சி., கணிதம்
தென்காசி யு.எஸ்.பி., பெண்கள் கல்லுாரியின் இம்மாணவியருக்கு நடிகர்... நடிகர் மட்டுமே; அரசியல்வாதி... அரசியல்வாதி மட்டுமே; இருவரும் 'தலைவர்' அல்ல!

