PUBLISHED ON : செப் 14, 2025

யோவ்... கிழவா... 'விக், மேக்கப்'புன்னு நீ காட்டுற வித்தைகளை நான் கவனிச்சுட்டுதான் இருக்குறேன்!
அய்யோ... போலீஸ்... எல்லாத்தையும் கவனிச்சிட்டீங்களா?
ஆமா... 'சென்னையில் மேகவெடிப்பு'ன்னு கேள்விப்பட்டதும், 'மழை விபரங்களை சொல்லுங்க'ன்னு தமிழக முதல்வர் ஜெர்மனியில இருந்து போன் பண்ணி அக்கறையா கேட்டதையும், 'எங்கேயுமே மழைநீர் தேங்கலை'ன்னு துணை முதல்வர் 'மனசாட்சி'யோட சொன்னதையும் முடிச்சு போட்டு...
'மழைநீர் வடிகால் பணின்னு நாலு வருஷமா பல கோடி செலவுல சென்னையை தோண்டியும் முதல்வருக்கு விசாரிக்கத் தோணுதுன்னா...'ன்னு இழுத்து, மதராஸி படம் பார்க்க வந்த பக்கத்து சீட்டுக்காரனை எழுப்பி 'பாலிடிக்ஸ்' பண்ண பாரு... அன்னைக்கே நான் உன்னை பிதுக்கி இருக்கணும்!
மனசுல இருக்குறதை பேசுறது தப்புங் களா போலீஸ்?
ஓ... மனசுல இருக்குறது எல்லாத்தை யும் சார் பேசிடுவீங்களோ; யோவ்... 'சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா திரையில இருக்குற வரைக்கும், தகுதியுள்ளவனுக்கு மட்டுமே வந்த 'ஹீரோ' ஆசை இப்போ யார் யாருக்கோ வருதே...'ன்னு உன் மனசு கொதிக்கலை?
கொதிக்குது... ஆனா, அதைச் சொல்ல நா கூசுதே!
இப்படி கூசுற நாக்கு, 'அதான் மழைநீர் தேங்கலேல்ல... அப்புறம் என்ன இதுக்காக, மழைநீர் இறைக்கணும்னு, 30 கோடி ரூபாய் செலவுல 477 டிராக்டர்களை சென்னை மாநகராட்சி வாடகைக்கு எடுக்குதாம்'னு ஏன்யா கேட்டுச்சு?
'ஈ.வெ.ரா., சிந்தனைகள் உலகம் முழுக்க பரவணும்னு லண்டன் பல்கலைக் கழகத்துல ஆசைப்பட்ட முதல்வருக்கு, கடவுள் பற்றிய ஈ.வெ.ரா.,வோட பொன் சிந்தனைகளை ஹிந்துக்கள் சிறுபான்மை யினரா இருக்குற அந்த மண்ணுல பரப்பிட்டு வர்றதுல என்ன தயக்கம்'னு ஏன் நோண்டுச்சு?
மன்னிச்சிருங்க போலீஸ்; இப்போ, எனக்கு நீங்க ஒரு '1,000 ரூபாய்' கொடுத் தீங்கன்னா அப்படியே நான் ஓடிருவேனாம் !
ஓஹோ... சரி... 'தமிழகம் கண்ட சிறந்த முதல்வர் யாரு'ன்னு சொல்லு... தர்றேன்!
மு.க.ஸ்டாலின்!
இந்தா புடி... ஓடு.

