sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

ஆரோக்கியம்

/

உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக இருக்கா?: 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்க..!

/

உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக இருக்கா?: 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்க..!

உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக இருக்கா?: 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்க..!

உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக இருக்கா?: 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்க..!


UPDATED : செப் 30, 2023 12:46 PM

ADDED : செப் 30, 2023 12:39 PM

Google News

UPDATED : செப் 30, 2023 12:46 PM ADDED : செப் 30, 2023 12:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது போன்ற சில தினசரி பழக்கவழக்கங்கள் உங்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்க உதவும். இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உங்களைத் தடுக்கும்.

இப்படி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 பழக்க வழக்கங்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

சீரான உணவை உண்ணுங்கள்

Image 1176861
நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சீரான உணவு மற்றும் போதிய நீரேற்றத்துடன் இருப்பது அவசியமாகும். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

தூக்கத்திற்கு முன்னுரிமை

Image 1176863
ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க மறக்க கூடாது. ஒருநாளைக்கு அதிகபட்சம் 7-9 மணிநேரம் தூங்க வேண்டும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்று நோய்களிடம் எதிர்த்து போராட உதவுகிறது.

உடல் செயல்பாடு

Image 1176860
தினமும் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோயெதிர்ப்பு உயிரணு இயக்கம் மற்றும் எதிர்வினைக்கு உதவுவதோடு, உங்கள் உடலின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.

மன அழுத்தத்தை நிர்வகித்தல்

Image 1176859
மன அழுத்தத்தால் அதிகரிப்பு காரணமாக நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறைய தொடங்கும். பெரும்பாலும் மன அழுத்ததை சமாளிக்க யோகா, தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

சரியான நேரத்தில் உணவு

Image 1176862
தினமும் சரியான நேரங்களில் உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கப்பெற்று நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்த உதவும். அதுமட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us