ADDED : அக் 25, 2024 09:32 PM

இனிப்பு இல்லாமல் தீபாவளியா. சான்சே இல்லை. வழக்கமாக செய்யும் அதிரசம், லட்டு, சோமாஸ் போன்ற பழைய இனிப்புகளை தவிர்த்து, இம்முறை புதுசா ட்ரை பண்ணுங்க.
செய்முறை
பூசணிக்காயை தோல் நீக்கி, கழுவி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். சிலர் பூசணிக்காயை துருவி, அல்வா போன்ற இனிப்பு தயாரிப்பர். ஆனால் துருவினால் தண்ணீர் விட்டு விடும். எனவே பொடியாக நறுக்கி கொள்வது நல்லது.
அரிசியை இரண்டு, மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். அதன்பின் மிக்சியில் கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ளுங்கள். இதில் வெல்லம், தேங்காய் துருவல், வெட்டி வைத்த பூசணிக்காயை போடுங்கள். ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நன்றாக கலக்குங்கள்.
நெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி, 20 நிமிடம் வேக வைத்தால். தீபாவளி பூசணிக்காய் கொழுக்கட்டை தயார்; சூடாக பரிமாறுங்கள். வினாடியில் தட்டு காலியாகும்.
தேவையான
பொருட்கள்
மஞ்சள் பூசணிக்காய் நறுக்கியது - 2 கப்
அரிசி - இரண்டு கப்
வெல்லம் - அரை கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை