ADDED : நவ 01, 2024 11:04 PM

தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த வாழைப்பழங்கள் - 2
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - 1/4 ஸ்பூன்
சர்க்கரை - 2 ஸ்பூன்
பால் - தேவையான அளவு
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
பிரெட் - 5 துண்டுகள்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக்கி, மிக்சியில் போட்டு கொள்ளவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து அரைக்கவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இதில் சோடா உப்பு போட்டு, நன்றாக கலந்து 20 நிமிடம் வைத்திருங்கள். ஒரு பிரட்டை முக்கோண வடிவில், இரண்டாக வெட்டி கொள்ளுங்கள். அதன்பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றுங்கள். காய்ந்ததும் பிரட் துண்டுகளை, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் பொறித்தெடுங்கள். மிதமான தீயில் இருக்க வேண்டும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுத்தால், பனானா பிரட் பஜ்ஜி தயார்.
இதை தயாரிப்பது மிகவும் எளிது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். மாலை டிபனுக்கு மட்டுமின்றி, காலை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மதிய உணவாக, பள்ளிக்கு டிபன் பாக்ஸிலும் கொடுத்து அனுப்பலாம்.