தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/அழகு/ புருவமே... புதிய பாடல் பாடு!

புருவமே... புதிய பாடல் பாடு!

புருவமே... புதிய பாடல் பாடு!


ADDED : ஜூலை 05, 2025 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புருவம் குறைவாக இருக்கும், பருவப்பெண்களின் லேட்டஸ்ட் தேர்வு, 'மைக்ரோபிளேட்டிங்'.

'செமி- பெர்மனென்ட் ஐப்ரோ டாட்டூயிங்' எனும் நவீன முறை பச்சைக்குத்துதான், மைக்ரோபிளேட்டிங்!

இதில் சிறிய கையடக்க கருவியின் உதவியுடன், தோலில் மெல்லிய கீறல்கள் செய்யப்படுகின்றன. அந்த இடங்களில் நிறமிகள் (பிக்மென்ட்) செலுத்தப்படுவதால், புருவங்களுக்கு அடர்த்தியும், அழகான வடிவமும் கிடைக்கின்றன.

'யாருக்கெல்லாம் இது பயன் தரும்?'

-அழகாக புருவங்களை உயர்த்தியபடி, நம் கேள்வியை எதிர்கொள்கிறார், அழகுக்கலை நிபுணர் இலக்கியா.

''புருவங்களில் முடி குறைவாக உள்ளவர்களுக்கும், மெல்லிய புருவங்களை கொண்டவர்களுக்கும் இது பெஸ்ட் சாய்ஸ். இயற்கையான, அடர்த்தியான புருவத் தோற்றம் பெற, இது ஒரு சிறந்த வழி. ஆனால், இது நிரந்தரமல்ல; சில மாதங்களில் மறைந்துவிடும்,''

''தோலை கீறுவதில் ஆபத்து ஏதுமில்லையா?''

''இந்த சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கருவி, தோலை கீறும் இயல்புடையதாக இருப்பதால், தோல் பாதிக்கப்படலாம். எனவே, நல்ல 'டெர்மடாலஜிஸ்ட்' ஆலோசனைப்படி, இதற்கென சான்றிதழ் பெற்ற நிபுணரை அணுகுவது சிறந்தது,”.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us