/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
வாழைப்பழ தோலை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாம்..!
/
வாழைப்பழ தோலை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாம்..!
வாழைப்பழ தோலை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாம்..!
வாழைப்பழ தோலை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாம்..!
UPDATED : செப் 15, 2023 12:33 PM
ADDED : செப் 15, 2023 12:26 PM

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்கிறது. தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நாம் பெரும்பாலும், வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை குப்பையில் போட்டு விடுவோம். வாழைப்பழ தோலை கீழ்க்கண்ட வகையில் பயன்படுத்துவதால்
ஏராளமான நன்மைகளை பெறலாம். அவை குறித்து அறிந்து கொள்வோம்.
1. இயற்கை உரமாக :
வாழைப்பழத்தை விட அதன் தோலில், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் என அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழ தோலை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மண்ணுக்குள் போடுவதால், தாவரங்களுக்கு நல்ல இயற்கையான ஊட்டச்சத்து கிடைக்கும். பூக்கள் செடிகளுக்கு போட்டால், நன்கு பூக்களை தரும்.
![]() |
2. பற்கள் வெண்மை நிறமாக :
வாழைப்பழ தோலில் உட்பகுதியை பற்களில் வைத்து சில நிமிடங்கள் தேய்க்கலாம். தோலில் உள்ள கனிமங்கள், குறிப்பிட்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வெண்மை நிறமாக மாறும்.
3. வெள்ளி பொருட்கள் பளபளக்க :
வெள்ளி பொருட்கள் பளபளக்க வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். வாழைப்பழ தோலை நன்கு மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளுங்கள். அதனை வெள்ளி பொருட்கள் மீது தடவுங்கள். சில நிமிடங்கள் கழித்து, கழுவினால் வெள்ளி பொருட்கள் பளபளக்கும்.
![]() |
4. ஷூ பிரகாசிக்க:
வாழைப்பழ தோலின் உட்பகுதியை, தோல் பொருட்களால் ஆன ஷூவை துடைக்க, புதியது போல பிரகாசிக்க பயன்படுத்தலாம். வாழைப்பழ தோலை நன்கு ஷூவின் மேல்பகுதியில் தேய்த்து, பின்னர் துணியை வைத்து துடைத்தால் பிரகாசிக்கும்.
5. சருமத்திற்கு மாய்ஸ்ரைசராக :
![]() |
6. பூச்சி விரட்டியாக :
வாழைப்பழ தோலை சிறு துண்டுகளாக நறுக்கி, வீட்டு தோட்டத்தில் போடவும். இது அஸ்வினி பூச்சி வளர்ச்சியை தடுக்கவும், பொதுவான பூச்சி விரட்டியாக செயல்படும் ஆற்றல் கொண்டது. இயற்கையான பூச்சி விரட்டியாக வாழைப்பழ தோல் செயல்படுகிறது.
7. முகப்பருக்கள் நீக்க :
வாழைப்பழ தோலின் உட்புறத்தை முகப்பரு உள்ள பகுதியில் தேய்க்கலாம். வாழைப்பழ தோலில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல், அழற்சி எதிர்ப்பு தன்மை, முகப்பருவால் சிவப்பு போவதையும், அழற்சியையும் குறைக்க உதவுகிறது.
8. மருவை விரட்டும் :
இரவு உறங்க செல்லும் முன் சிறிதளவு வாழைப்பழ தோலை மரு பகுதியில் தேய்க்கவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். வாழைப்பழ தோலில் உள்ள என்சைம்கள் மருவை நீக்க உதவும்.