ஜூன் 20 முதல், ஜூலை 12 வரை கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா டிராபி
ஜூன் 20 முதல், ஜூலை 12 வரை கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா டிராபி
ADDED : ஜூன் 04, 2026 11:01 PM

- நமது நிருபர் -:
கே.எஸ்.சி.ஏ.,வின் மஹாராஜா டிராபி, வரும், 20ம் தேதி முதல், ஜூலை, 12ம் தேதி வரை நடக்கிறது. ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.
கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் மஹாராஜா டிராபி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு போட்டி குறித்து, கே.எஸ்.சி.ஏ., செய்தி தொடர்பாளர் வினய் மிருதுஞ்செயா கூறியதாவது:
மஹாராஜா டிராபி, வரும், 20ம் தேதி முதல், ஜூலை 12ம் தேதி வரை நடக்கிறது. கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ், குல்பர்கா மிஸ்டிக்ஸ், மைசூரு வாரியர்ஸ், ஷிவமொக்கா யோதாஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு ஆகிய ஆறு அணிகள் மோதுகின்றன.
மைசூரில், 20ம் தேதி முதல், 26ம் தேதி வரை; ஹூப்பள்ளியில் ஜூன் 27 முதல், ஜூலை 3 வரை; ஜூலை 5 முதல், 12ம் தேதி வரை பெங்களூரிலும் நடக்கிறது.
மைசூரு, ஹூப்பள்ளியில் தலா 12 போட்டிகளும், பெங்களூரில் இரண்டு தகுதி சுற்றும், வெளியேற்றம் மற்றும் இறுதி போட்டி என 10 போட்டிகளும் நடக்கும்.
இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம், இன்று காலை 9:00 முதல், மதியம் 1:00 மணி வரை பெங்களூரில் நடக்கிறது. 150க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம் பெறவுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
--------------
படவிளக்கம்
5_Article_0003
மஹாராஜா டிராபி
கர்நாடக கிரிக்கெட் ரசிகர்களுக்கு தரமான கிரிக்கெட்டை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளியில் நடக்கிறது. கேசவா, தலைவர், கவர்னிங் கவுன்சில், மஹாராஜா டிராபி
