இன்று உலக இட்லி தினம்!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ல் உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
இட்லி... தழிழகத்தின் ஆதர்ச காலை உணவு. இட்லி இல்லாமல் தென்னிந்திய உணவே முழுமையாகாது எனக் கூறலாம்.
அரிசி மற்றும் உளுந்து சேர்த்து ஆவியில் வேகவைக்கப்படுவதால், இது மிகச்சிறந்த சத்தான மற்றும் பக்க விளைவில்லாத உணவாகக் கருதப்படுகிறது.
குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என எவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு இட்லி தான். பிறந்து 7 மாதமான குழந்தைகளுக்கு இட்லியை பாலில் ஊற வைத்து கொடுக்கலாம்.
கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இட்லியை தாங்கள் தோற்றுவித்ததாக உரிமை கொண்டாடினாலும், அது இந்தோனேசியாவையே தோன்றிய இடமாக கொண்டுள்ளது என்று கூறுகின்றனர்.
ரவை, கோதுமை, ஓட்ஸ், வெஜிடபிள் இட்லி, ஸ்வீட் இட்லி, சிறுதானிய இட்லி, ப்ரைடு இட்லி, நெய் இட்லி, சாம்பார் இட்லி, மினி இட்லி, இட்லி கட்லட், காளான் இட்லி என இதிலும் பல வகை வந்துவிட்டது.
இட்லி மீதமானால் மறுநாள் வெங்காயம், காய்கறிகள், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து உப்புமாவாக செய்லாம் என்பதால் அதனால் வீண் என்பதே கிடையாது.