40 பிளஸ் பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மாதவிடாய் நிற்பதற்கு அதிக ரத்தப்போக்கு போன்ற அறிகுறி காணப்படும் என நினைப்பதுண்டு.

இதனால் பல பெண்கள் அறியாமையால் ரத்த சோகை ஏற்பட்டு பாதிப்பு அதிகம் ஆனபின், தாமதமாகவே சிகிச்சை எடுப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர் .

எனவே இயல்பை விட வலி, ரத்தப்போக்கு ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என கூறப்படுகிறது .

அப்படி செய்யாவிட்டால் நடைமுறை வாழ்க்கை பாதிப்பதுடன், ரத்த சோகை, சோர்வு, பதட்டம் ஏற்படக்கூடும்.

குறிப்பாக 40 வயதிற்கு மேல், கர்ப்பப்பை சதை வளர்ச்சி, வீக்கம், சினை முட்டை உருவாகும் இடத்தில் பிரச்னை, ஹார்மோன் மாறுபாடு போன்ற பாதிப்பு உண்டா என கண்டறிய வேண்டும்.

இதற்கு சாதாரண ரத்த சோதனை, ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்போதுதான் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள முடியும்.